Latest News

March 22, 2016

தமிழினி எழுதிய “ஒரு கூர்வாளின் நிழல்“ இதை அவர் உண்மையில் எழுதினாரா?
by admin - 0

தமிழினி எழுதிய “ஒரு கூர்வாளின் நிழல்“ 

இதை அவர் உண்மையில் எழுதினாரா?

ஏன் எழுதினார்? இது எவ்வளவு தூரம் உண்மை? 
******************************************************************
ஈழத்து துரோணர்.!!
*************************** 
 முதலில் தலைவரைப் பற்றி தமிழினி தனது  “ஒரு கூர்வாளின் நிழல்“ புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள முக்கிய விமர்சனத்தின் சிறிய பகுதியை பாருங்கள். இதில் அவர்.. 

///ஒருநாள் நானும் தளபதிகள் விதுஷாவும், துர்க்காவும் தலைவரை சந்திப்பதற்காக அழைக்கப்பட்டிருந்தோம். அது சமாதானம் தொடங்கிய ஆரம்ப கால கட்டம். அந்த சந்திப்பில் தலைவர் பல விடயங்கள் பற்றியும் எம்மோடு பேசிக்கொண்டிருந்தார். அதில் ஒரு சந்தர்ப்பத்தில் கூறினார்;  மட்டக்களப்பு, அம்பாறைப் போராளிகள் போராட்டத்தில எவ்வளவோ கஷ்டங்களைப் பட்டிருக்கிறாங்கள் அவங்கட குடும்பங்களுக்கும் அந்த மக்களுக்கும் நிறைய வேலைகள் செய்யவேணும். நிதித்துறை மூலமா ஒரளவு பண உதவியையும் செய்து கருணாவுக்கும் சொல்லியிருக்கிறன், அந்தச் சனத்திற்கு நிறைய உதவிகள் செய்யச் சொல்லி. அவன் செய்யிறான், இவங்கள் பொட்டு ஆக்கள் என்னட்ட வந்து அங்க அது பிழை இது பிழை எண்டு சொல்லிக் கொண்டு நிக்கிறாங்கள், தளபதிமாருக்குள்ள முதலில ஒற்றுமை இருக்கவேணும் என்று குறிப்பிட்டார்///
********************************************************************************************************************************************
நான் இதுவரை தமிழினி எழுதிய “ஒரு கூர்வாளின் நிழல்“ என்னும் புத்தகத்தை வாசித்தது கிடையாது. 

ஆனால் இணையத்தளம் ஒன்றில் வந்த, "அந்த புத்தகத்தின் ஒரு சில வரிகளில் தலைவரின் ஆளுமை பற்றிய கேள்வியை ஏற்படுத்துமளவுக்கு" ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அதற்கான உண்மை தன்மையை நான் கண்டு கேட்டதை உங்களோடு பகிர்கின்றேன்.! 

மேற்கூறிய கருத்தில் தலைவர் இவர்களிடம், அம்மானை குறை கூறியாதாக கூறுகின்றார். அதில் கருணாவை நல்லவனாக்க முயற்சி செய்கின்றார். 

இதை அவர் உண்மையிலேயே எழுதி இருந்தால்? ஏன் இதை எழுதினார்? என்ற கேள்வி எழுவதை தடுக்க முடியாது.? 

ஆரம்பத்தில் இருந்தே இவரது விடுதலை மீது, எனக்குள் ஒரு நெருடல் இருந்தபடியே தான் இருந்தது.! 

காரணம் தமிழினியை விட சிறிய போராளிகளும், அவரின் கீழ் பணியாற்றியவர்களும் இன்றும் தடுப்பில் இருக்கும் போது, இவரை எப்படி விடுதலை செய்தார்கள் என்ற கேள்வி எனக்குள் எழுந்தது இயல்பே.! 

அப்போது எனது நண்பர்கள் மூலமாக அறிந்த ஒரு விடையம் (தடுப்பில் இருந்து வந்த போராளி) "இவரது விடுதலைக்கு கருணாவின் உதவி கிடைத்ததென்பது" நான் அறிந்தது. 

அன்று அதை நான் பெரிதாக எடுக்கவில்லை. அவரது விடுதலை மனநிறைவை தான் எனக்கு தந்தது. அது போல ஏனையவர்களின் விடுதலையும் சாத்தியமாக வேண்டும் என்ற என்னமமே என்னுள் மேலோங்கி இருந்தது.

இன்று எனது நெருடல் உண்மையாக படுகின்றது! தலைவர், அம்மானை பற்றி இவர்களுடன் உரையாடியதாக இவர் கூறுவது வடி கட்டிய பொய். 

எனது நீண்டகால போராட்ட வாழ்வில் சில காலங்கள் தலைவருடன் கூடவே  (மணலாற்றில் இருக்கும் போது) பயணித்துள்ளேன். 

அவரது ஆளுமைகளில் மிக முக்கியமானது இன்னொருவர் பற்றி, இன்னொருவருடன் எந்த சந்தர்ப்பத்திலும் கலந்தாலோசிக்க மாட்டார்.! 

இன்னொரு துறையின் நடவடிக்கைகளை வேறு ஒரு துறையை சேர்ந்தவர்களுடன் ஒரு போதும் அவர் பகிர்ந்து கொள்வதில். இதுவே அவரது ஆளுமையின் வெற்றியின் மூலக்கூறு. 

இதை நான் அவருடன் நிக்கும் போதும் சரி, வேறு பணிக்கு சென்றபின் அவரை சந்திக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் நான் கண்டு வியந்த விடையங்களை தான் தமிழினி கேள்விக்குறியாக்கி உள்ளார். 

பொட்டுஅம்மானை, இவர்களிடத்தில் விமசிக்கும் அளவுக்கு அவர் ஒன்றும் புதிய போராளி அல்ல. இன்னும் சொல்லப்போனால் தலைவருக்கு அடுத்த நிலையில் இருந்த தளபதியும் அவரே. 

ஆக அம்மானை பற்றி, தலைவர் இவரிடம் விமர்சிக்கும் அளவுக்கு, "போராளிகள் மத்தியில் தமிழினி ஒன்றும் பெயர் சொல்லும் அளவுக்கான புலிகளின் முக்கிய உறுப்பினர்" கிடையாது. 

அரசியல் துறையில் பணியாற்றியமையால் ஊடகங்களின் பார்வை அவர்மேல் நன்றாக படிந்துள்ளமையால், அவர் மீதான வெளியுலக வெளிச்சம் நன்கு படிந்துள்ளது. அதனால் அவரது பெயர் முக்கியம் பெற்றதாக மக்கள் மத்தியில் போய்ச் சேர்ந்துவிட்டது. 

உண்மையில் இதை தமிழினி தான் எழுதினாரா என்று தெரியவில்லை.? அப்படி அவர் எழுதியிருந்தால் எனது சந்தேகம் உறுதிப்படுத்தப்பட்டதாகிவிடும்.! 

தனது "விடுதலையை பெரிதாக கருதியமையால் தான், அதற்கு உதவிய கருணாவிற்கு உதவும் நோக்கிலேயே" அவர் மேல் உள்ள களங்கத்தை போக்க தமிழினி எண்ணியுள்ளார். 

அடுத்தது இவரது விடுதலைக்கு சிங்கள அரசுடன் போட்ட எழுதப்படாத ஒப்பந்தத்தின்படி எமது அடுத்த தலைமுறையின் போராட்ட உளவுரணை சிதைக்கும் வார்த்தைகளை, அந்த புத்தகத்தில் பிரயோகித்து அவர்களுக்காகவே இதை எழுதி தனது நன்றிக்கடனை செலுத்தியுள்ளார். 

அவர் ஒன்றை சரியாக கணிப்பிட தவறிவிட்டார்.! 
எமது மக்களுக்கு கருணாவின் துரோகமும், சிங்கள அரசின் கபடநாடகமும் நன்கு தெரியும். ஏனெனில் அவர்கள் தலைவரை நம்புகின்றார்கள். இவர்கள் போன்றவர்ளின் கருத்தை, எம் மக்கள் என்றும் ஏற்கப்போவதில்லை. இதுவே எமது வரலாறு.!

ஒரு பழமொழி ஒன்றை எம் மக்கள் அடிக்கடி கூறுவார்கள் "ஒரு பானை சொற்றுற்கு ஒரு சோறு பதம்" என்று. இவரது புத்தகத்தின் உண்மை தன்மைக்கு தலைவர் மீதான விமர்சனம் ஒன்றே போதும், ஏனையவையின் பொய்க்கும் இது ஒன்றே சான்று.!
சலிப்புடன் துரோணர்.!!
« PREV
NEXT »

No comments