யுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த இரண்டு இளம் கிரிக்கெட் வீரர்களின் பெயர் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விக்கெட் காப்பாளரான றிஷாந் ரியூடர் மற்றும், முதல்வரிசை துடுப்பாட்ட வீரரான எஸ்.சஞ்சீவன் ஆகியோரின் பெயரே தேசிய கிரிக்கெட் அணியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை தேசிய அணியை தயார்படுத்தும் நோக்கத்தில் மலேசியாவில் நடைபெறவுள்ள 3 ஒருநாள் போட்டித் தொடரிலும், டுவன்டி-20 போட்டியிலும் இவர்கள் இருவரும் பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் புனித பற்றிக்ஸ் கல்லூரி அணிக்காகவும், ரியூடர் மற்றும் மட்டக்களப்பு சென். மைக்கல் கல்லூரிக்காகவும் சஞ்ஜீவன் ஆகியோர் கடந்த காலங்களில் விளையாடியிருந்ததுடன், இலங்கையில் இடம்பெற்ற முதல்தரப் போட்டிகளிலும் விளையாடியிருந்தனர்.
இதன்போது இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திரங்களான முத்தையா முரளிதரன் மற்றும் குமார் சங்கக்கார ஆகியோரின் பாராட்டுக்களையும் இவர்கள் பெற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments
Post a Comment