Latest News

March 18, 2016

பேர்மிங்காமில் தொடரும் துப்பாக்கிச்சூடு: இளைஞன் பலி
by admin - 0

துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இங்கிலாந்தின் பேர்மிங்காம் பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் 18 வயதுடைய ஒருவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த சம்பவமானது கொலைக் குற்றச்சாட்டின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக மேற்கு மிட்லண்ட்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர் குழுவினர் சோதனை நடத்தி வருகின்ற நிலையில் அந்த பகுதி ஊடான வீதி மூடப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த சம்பவத்தை நேரில் கண்டவர்கள் இருப்பின் தகவல் வழங்குமாறும் பொலிஸார் கோரியுள்ளனர்.

அதேவேளை, பேர்மிங்காம் வீதியில் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இடம்பெற்ற நான்காவது மிகக் கொடூரமான துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

« PREV
NEXT »

No comments