எம் அண்ணன்கள் 7பேரும் சுதந்திர
*************************************************
காற்றை சுவாசிக்க முடியுமா?
மத்திய அரசிடம், தமிழக அரசினால், ராஜிவ்காந்தியின் கொலையில் உதவியதாகக்கூறி குற்றம் சாட்டப்பட்டு 25ஆண்டுகளாக சிறையில் வாடும் 7பேர் விடுதலைக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் நேரம் இந்த அறிவுப்பு வெளியாகி உள்ளது. இதே போல கடந்த நாடாளமன்ற தேர்தலுக்கு முன் இவர்களின் விடுதலை பற்றிய அறிவிப்பு ஒன்று அம்மா ஜெயலலிதா அரசால் வெளியிடப்பட்டது.
அதற்கு ஐயா கருணாநிதியும் தன் பங்கிற்கு "ஏழு பேரை விடுதலை செய்தால் அதில் உள்ள சாதக பாதகத்தை நினைவில் கொள்ளவேண்டாமா"?என்று கேள்வியும் எழுப்பினார்.
ஆனால் எதுவும் அன்று நடக்கவில்லை.!
ஆனால் அம்மா ஜெயலலிதாவின் கட்சியோ 95% வாக்குகளை பெற்று அந்த தேர்தலில் வெற்றியீட்டியது. இந்த அறிவிப்பும் அது போன்றது தானா?
மீண்டும் தமிழர் தலையில் மிளகாய் அரைக்கும் முயற்சியா?
இந்திய அரசின் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி, பல கொலைக்குற்றவாளிகள் இலகுவில் தப்பி செல்கின்றார்கள். (சஞ்சய்தத் போன்றவர்கள்) ஆனால் எந்த குற்றமும் செய்யாதவர்கள் 25வருடங்களாக தண்டனை அனுபவித்து வருகின்றார்கள்.
தமிழர் என்னும் ஒரு காரணத்திற்காக. தமிழக அரசின் இந்த முடிவில் அப்பட்டமான அரசியல் இருந்த போதும் எம் அண்ணன்களின் விடுதலை சாத்தியமாக வேண்டும் என்பதே தமிழராகிய எமது எண்ணம்.
எம் அண்ணன்கள் 7பேரும் சுதந்திர காற்றை சுவாசிக்க முடியுமா? அல்லது அவர்களின் நம்பிக்கை மீண்டும் பொய்த்து போகுமா?
துரோணர்.!
No comments
Post a Comment