டெல்லி பெரோஸ் ஷா கொட்லா விளையாட்டரங்கில் எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறுவதற்கு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ள உலகக் கிண்ண இருபதுக்கு 20 மட்டைப்பந்து முதலாவது அரை இறுதிப் போட்டி அங்கு நடைபெறுமா என்ற சந்தேகம் நிலவுகின்றது.
விளையாட்டரங்கில் உள்ள ஆர். பி. மெஹ்ரா பார்வையாளர் தொகுதிக்கான டிக்கெட்டுக்களை டெல்லி மாவட்ட கிரிக்கெட் சங்கம் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட் டுள்ளது.
ஆர். பி. மெஹ்ரா ஆசனத் தொகுதிக்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்ய அனுமதிக் கப்படாவிட்டால் அப் பகுதியில் 1,800 ஆசனங்கள் காலியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் குறிப்பிட்ட பகுதியில் விளம்பரப் பலகைகளை தொங்கவிடுவதற்கு அனுமதி கிடைக்குமா என்ற சந்தேகமும் நிலவுகின்றது. இந்தக் கட்டுப்பாடுகள் டெல்லி உயர்நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டன.
இவ்வாறான சூழ்நிலையில் முதலாவது அரை இறுதிப் போட் டியை வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்து ஆலோசிக்கப் பட்டு வருகிறதாம்.
No comments
Post a Comment