தேமுதிக - ம.ந.கூட்டணி இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டவுடன், தேமுதிக அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசுகையில், மக்கள் நலக்கூட்டணியைச் சேர்ந்த இங்கு வந்து இருக்கும் அனைத்து தலைவர்களுக்கும் நன்றி. உங்களை வரவேற்கிறேன். இந்த கூட்டணி என்பது முன்பே முடிவு செய்யப்பட்ட ஒன்று.
இடையில் பணத்தாசைக்கு விஜயகாந்த் எங்கோ போய்விட்டார் என்றார்கள். நான் எங்கும் போகவில்லை. எந்த பக்கமும் சாயவில்லை. மக்களோடும், தெய்வத் தோடும் தான் கூட்டணி என்றேன். அது போல் மக்கள் நலக்கூட்டணி என்று பெயர் இருக்கும் மக்கள் கூட்டணியுடன் இணைந்து இருக்கிறேன் தெய்வத்தை அவர்களுக்கு பிடிக்குமோ பிடிக்காதோ ஆன எனக்கு பிடிக்கும். இங்கு இருப்பவர்கள் எல்லாம் பெரியவர்கள் தான்.
என்னிடம் கூட்டணி தொடர்பாக கட்சி தலைவர்கள் பேசியபோது நாங்கள் கிங் மேக்கர்களாக இருக்கிறோம் நீங்கள் ;கிங்’ ஆக இருங்கள் என்றார்கள். வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சி அறிவிக்கலாமா என்று என்னிடம் கேட்டார்கள் தைரியமாக அறிவியுங்கள். கூட்டணி மந்திரி என்று அறிவிக்கவும் என்று சொன்னேன். நான் இந்த கூட்டணிக்கு ’கிங்’ ஆக இருப்பேன். இந்த கூட்டணிக்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றி. இவ்வாறு பேசினார்.
No comments
Post a Comment