வடக்கு, கிழக்கு மாகாண இணைப்பு தொடர்பாகவும் மனித உரிமைகள், காணி தொடர்பாக நீதி வழங்க பிராந்திய நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும். மற்றும் பெரும்பான்மை இனமாக வாழும் பௌத்த சிங்கள மக்கள் தம்முடன் சம்பந்தமில்லாத இடங்களில் விகாரைகள் அமைப்பதை தடுப்பதற்கான கடும் சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் யோசனைகளை தெரிவித்தனர்.
அரசியல் யாப்பு சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் முன்வைக்கும் திருகோணமலை மாவட்டத்திற்கான நிகழ்வு நேற்றுக் காலை திருமலை மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கான குழுவுக்கு வின்ஸ்டன் பதிராஜா தலைமை தாங்கியதுடன் எஸ்.சீ.சீ.இளங் கோவன், ஏ.தவராஜா, என்.செல்வக்குமாரன் ஆகி யோர் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது மக்கள் யோசனைகளை தெரிவித்தனர். வடக்கு, கிழக்கு மாகாண இணைப்பு தொடர்பாகவும் மனித உரிமைகள், காணி தொடர்பாக நீதி வழங்க பிராந்திய நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும். பெரும்பான்மை இனமாக வாழும் பௌத்த சிங்கள மக்கள் தம்முடன் சம்பந்தமில்லாத இடங்களில் விகாரைகள் அமைப்பதை தடுப்பதற்கான கடும் சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
நிலம் மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பாக வெளிப்படைத் தன்மை பேணப்படுவதாக இருக்க வேண்டும். 12 ஆணைக்குழுக்கள் சுயாதீனமாக செயற்பட வேண்டும்.
ஒரு இனத்திற்கு குறிப்பிட்ட தீமையை ஏற்படுத்தாத வண்ணம் சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். தொகுதி மற்றும் தொகுதியை 50 க்கு 50 வீதம் என்ற அடிப்படையில் தேர்தல் சட்டம் உருவாக்கப்பட வேண்டும். தேர்தல்களில் வேட்பாளர்களாக பெண்களின் பிரதிநிதித்துவத்தை அரசியல் சட்டமாக்க வேண்டும். மாகாண மட்டத்தில் ஒம்புட்ஸ்மேன் நியமிக்கப்படல் வேண்டும் போன்ற கருத்துக்களை தெரிவித்தனர். அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் தன் னார்வ அமைப்புகளின் பிரதிநிதிகள், பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் இதில் கலந்து கொண்டு தமது யோசனைகளை முன்வைத்தனர்
No comments
Post a Comment