விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன் னாள் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை 6000 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என்ற வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனின் பரிந்துரைக்கு அரசாங்கம் இணக்கம் தெரிவிக்க முற்பட்டால் அரசாங்கத்தை கடுமையாக எதிர்ப்போம் என்று பாராளுமன்ற உறுப்பினரும் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
பிவிதுரு ஹெல உறுமயவின் தலைமை அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
1980 களில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு எதிராக வேலை நிறுத்த போராட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கு கடந்த மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்தில் 5000 ரூபா மாதாந்த கொடுப்பனவு வழங்கப்பட்டது. அந்த கொடுப்பனவையும் நிறுத்த தற்போது நல்லாட்சி அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூலை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்களுக்கு வழங்கப் பட்டு வந்த 5000 ரூபாய் கொடுப்பனவு 6000ஆக அதிகரிக்கப்பட்டதுடன் பணத்திற்கு உரிய நபர் இறக்கும் பட்சத்தில் அது அவரது மனைவிக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
தற்போது நல்லாட்சி அரசாங்கம் 1980 க ளில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு எதிராக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு வழங்கப்பட்ட 5000 ரூபாய் மாதாந்த கொடுப்பனவுக்கு மாறாக 2இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை மொத்தமாக செலுத்திவிட்டு அதன் பின்பு பணம் பெற்றவர்கள் அரசாங்கத்திடமிருந்து எந்த தொகையையும் எதிர்பார்க்க மாட் டோம் என்று குறிப்பிடப்பட்ட ஆவணத் தில் கையெழுத்திட வேண்டும் என்றும் கூறி யுள்ளது.
36 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஜூலை வேலை நிறுத்தத்திற்காக தற்போதும் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் பழிவாங்க முற்படுவது நியாயமற்றது. இது இவ்வாறிருக்க வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகளுக்கு வழங்கப்படும் 3000 ரூபாய் கொடுப்பனவை 6000 ஆக அதிகரித்து மாதாந்தம் வழங்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அது தொடர்பில் ஆராய்ந்து பார்த்து விரைவில் தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அவ்வாறு செய்ய முற் பட்டால் அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான எதிர்ப்பை வெ ளியிடுவோம். அதேபோல் 30 வருடம் யுத்தம் செய்து நாட்டை பிளவு படுத்துவதை பார்க்கிலும் வேலை நிறுத்தம் செய்வது மிகப்பெரிய குற்றமா என்ற கேள்வியை அரசாங்கத்திடம் வினவுகின்றோம்.
அரசாங்கம் ஏன் இவ்வாறு அமானு ஷ்ய தீர்மானம் ஒன்றை எடுத்தது என்பது எமக்கு மட்டுமல்லாது மக்களுக்கும் கேள்விக்குறியாகவே உள்ளது. அதனால் மக்கள் முன்னிலையில் அரசாங்க தரப்பு குறித்த காரணங்கள் தொடர்பில் பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட வேண்டும். வரலாற்றி லிருந்து இந் நாடு பிளவுபடுவதற்கு இட மளிக்காது பாதுகாத்து வந்த தேரர்களை தண்டிக்கும் அரசாங்கம் யுத்தம் செய்தவர் களை ஆதரிப்பதும் கேள்விக்குரியதாகவே உள்ளது. என்றார்.
No comments
Post a Comment