Latest News

February 18, 2016

மைத்திரிக்கு எதிராக தமிழர்கள் ஆர்ப்பாட்டம்
by admin - 0

ஜேர்மன் தலைநகர் பேர்லினில் புலம்பெயர் தமிழர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நல்லாட்சி அரசாங்கம் என்ற பெயரில் தொடர்ந்தும் தமிழர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவதாகக் கண்டித்தும், ஜேர்மன் அரசாங்கம் எந்தவகையான உதவிகளையும் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கக் கூடாது எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் கறுப்புக் கொடியை தாங்கியவாறு ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் கலந்து கொண்டனர். மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கும் மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்திற்கும் இடையே பாரிய வேறுபாடுகள் இல்லை என்றும் சுட்டிக்காட்டிய ஆர்ப்பாட்டகாரர்கள், போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகள் ஈடுபடுத்தப்பட வேண்டும் எனவும் கோஷம் எழுப்பியுள்ளனர்.

ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராகவும் கோஷம் எழுப்பிய ஆர்ப்பாட்டகாரர்கள் சர்வதேச ரீதியாக தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய ஆதரவு தளத்தை உடைக்கும் செயற்பாட்டில் மைத்திரிபால சிறிசேன ஈடுபடுவதாகவும் குற்றஞ்சாட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது
« PREV
NEXT »

No comments