Latest News

February 18, 2016

இலங்கை வான் பரப்பில் மற்றுமொரு கூகுள் பலூனை செலுத்த முடிவு.
by admin - 0

மற்றுமொரு கூகுள் பலூனை விண்ணில் செலுத்தவுள்ளதாக, இலங்கை தகவல் தொழில்நுட்ப மற்றும் தொடர்பாடல் பிரதிநிதிகள் நிறுவனத்தின் வேலைத்திட்ட முகாமையாளர் கவாஸ்கர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இதுபோன்று மேலும் சில கூகுள் பலூன்களை அந்த நிறுவனம் இலங்கைக்கு வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கூகுள் நிறுவனத்தினால் அதிவேக இணைய வசதியை ஏற்படுத்தும் நோக்கில், முன்னதாக பரிட்சார்த்தமாக செலுத்தப்பட்ட பலூன் புசல்லாவ - களுகல்லவத்தை பகுதியில் நேற்றிரவு வீழ்ந்துள்ளது.

குறித்த பலூன் மற்றும் இணைய கருவிகள் புப்புரெஸ்ஸ காவல்நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாக அதிகாரியொருவர் தெரிவித்தார்.

சீரற்ற காலநிலை மற்றும் பலூனின் பயணப் பாதையில் ஏற்பட்ட தடங்கல்கள் காரணமாக இவ்வாறு இணைய கருவிகளுடன் பலூன் தரையில் வீழ்ந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

´புரோஜெக்ட் லூன்´ எனப்படும் கூகுளின் அதிவேக இணைய சேவைக்கான பரிசோதனை கடந்த திங்கட்கிழமை இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments