ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஜேர்மன் அதிபர் ஏஞ்ஜலினா ஆகியோருக்கிடையில், நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற சந்திப்பின்போது இதுகுறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் திறன்விருத்தி, சுகாதாரம் மற்றும் தொழிநுட்பம் போன்ற துறைகளில் அதிக கவனம் செலுத்துவதாகவும் இதன்போது ஜேர்மன் அதிபர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையில் சிறுநீரக நோயை ஒழிப்பதற்கு உதவுமாறு ஜனாதிபதி மைத்திரி விடுத்த கோரிக்கைக்கும், ஜேர்மன் அதிபர் இணக்கம் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து திருப்தி தெரிவித்துள்ள ஜேர்மன் அதிபர், தெற்கு பிரதேசத்தைப் போன்று வடபகுதி மக்களும் மகிழ்ச்சியாக வாழ்வதாக தமக்கு அறியக்கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். வட பகுதி மக்களின் நலனுக்காக தமது அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்குமெனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இலங்கையின் மீன் ஏற்றுமதிக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளமை குறித்து கவனம் செலுத்துவதாகவும் ஜேர்மன் அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மீளப் பெற்றுக்கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும், ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை ஜேர்மனியின் அதிபரை இலங்கைக்கு விஜயம் றேம்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள அழைப்பையும், ஏஞ்ஜலினா ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
No comments
Post a Comment