Latest News

February 23, 2016

லண்டனில் ரத்தத்திற்கு ரத்தம் போராட்டம் - தமிழ் இளைஞர்களின் புதிய போராட்டம்
by admin - 0

தமிழர் வரலாற்றிலே மறக்க முடியாத நாட்கள். மே 18 ம் நாளை நினைவு கொள்ள லண்டனில் தமிழ் இளையோர்கள் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்கள். நீண்ட பெரு வலியுடன் மக்களின் இறுதி மூச்சுக்காற்று தாயக மண்ணிலே புதையுண்டு, எரியுண்டு, கதறக் கதற படுகொலை செய்யப்பட்ட மே மாதத்தில் பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழு(TCC) மற்றும் பிரித்தானியா தமிழ் இளையர் அமைப்பு இணைந்து தமிழினவழிப்பை நினைவுகூரும் இரத்தப் போராட்டம் மே 16,18,19,மற்றும் 20 ஆகிய நாட்களில் நடை பெற உள்ளது. பிரித்தானியா வாழ் தமிழீழ மக்கள் அனைவரையும் இவ் போராட்டத்துள் கலந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்காலில் ரத்தம் ஆறாய் ஓடியது. ஆனால் இன்றோ தமிழ் இளைஞர்கள் அன் நாளில் லண்டனில் பல இடங்களில் ரத்ததானம் செய்ய உள்ளார்கள். இதுவரை லண்டனில் நடைபெறாத அளவு எழுச்சியுடன் மே 18 நிகழ்வுகள் , தமிழீழ தேசிய கொடி ஏற்றப்பட்டு நடைபெறவுள்ளது. இதனை செம்மையாக செய்யும் பொறுப்பை இம்முறை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு எழுத்துள்ளது. பிரித்தானிய வாழ் மக்கள் ஒரு குடையின் கீழ் ஒன்றாக , திரண்டு உலகிற்கு சொல்லவேண்டும் ஒரு செய்தியை.

வடமேற்கு லண்டன் - 07540302109

தென்மேற்கு லண்டன் - 07078771306

தென்கிழக்கு லன்டன - 07770343375

புறநகர் லண்டன் - 07581033454




« PREV
NEXT »

No comments