Latest News

February 23, 2016

உரித்துக்கள், உரிமைகளை வழங்குங்கள் கலப்புத்திருமணம் பற்றி பின்னர் பேசலாம்-முதலமைச்சர் விக்கினேஸ்வரன்
by admin - 0

தேசிய சாரணர் ஜம்போரி நிகழ்வில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன்


வட­கி­ழக்கை தாய­க­மாக கொண்ட தமிழ் மக்­க­ளுக்கு அவர்­களின் உரித்­துக்­களை, உரி­மை­களை கொடுங்கள் பின்னர் கலப்பு திரு­ம­ணங்கள் குறித்து நாங்கள் பார்த்துக் கொள்­ளலாம். நாங்கள் கலப்பு திரு­ம­ணங்­க­ளுக்கு எதி­ரா­ன­வர்கள் அல்ல. என வட­மா­காண முத­ல­மைச்சர் சீ.வி.விக்­கினேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.

இலங்­கையில் கலப்பு திரு­ம­ணங்கள் நடக்­க­வேண்டும். அதன் ஊடாக இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லி­ணக்­கத்தை வளர்க்க முடியும். என வட­மா­காண ஆளுநர் றெஜினோல்ட் குரே அண்­மையில் தனது பத­வி­யேற்பு நிகழ்வில் தெரி­வித்­தி­ருந்தார்.

இந்­நி­லை­யி­லேயே ஆளு­நரின் கருத்­துக்கு வட மாகாண முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் பதில் வழங்­கி­யுள்ளார்.

நேற்று 9ஆவது தேசிய சாரணர் ஜம்­போரி நிகழ்வு யாழ்.மத்­திய கல்­லூரி மைதா­னத்தில் ஜன­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவால் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக தொடங்­கி­வைக்­கப்­பட்­டது. இந்­நி­கழ்­வி­லேயே முத­ல­மைச்சர் ஆளு­நரின் கருத்­துக்கு பதில் கருத்தை தெரி­வித்­தி­ருக்­கின்றார். அங்கு முத­ல­மைச்சர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

நாங்கள் கலப்பு திரு­ம­ணத்­திற்கு எதி­ரான மனப்­பாங்கு உள்­ள­வர்கள் கிடை­யாது. என்­னு­டைய பிள்­ளைகள் சிங்­கள இனத்­த­வர்­களை திரு­மணம் செய்து கொண்­டார்கள். ஆனால் இங்கே அவ்­வா­றில்லை வட­கி­ழக்கு தமிழ் மக்­க­ளுக்கு கிடைக்­காமல் இருக்­கின்ற கிடைக்­க­வேண்­டிய அவர்­க­ளு­டைய உரித்­துக்­களை, உரி­மை­களை வழங்­குங்கள் அதற்குப் பின்னர் நாங்கள் கலப்பு திரு­ம­ணங்­களைக் குறித்து பேசிக் கொள்­ளலாம்,பார்த்துக் கொள்ளலாம். மேலும் இங்கே சாரணியர்கள் ஒன்றிணைந்திருப்பதன் ஊடாக எங்களால் சகலவற்றையும் செய்ய முடியும் என்பதை காட்டியிருக்கின்றீர்கள் என்றார்
« PREV
NEXT »

No comments