இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரால் சுமார் 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு பொய்யென காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இராணுவத்தினரால் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படும் பொய்யான குற்றச்சாட்டுக்களால் தருஸ்மன் அறிக்கையும் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட இரண்டாம் கட்ட விசாரணைகளின் அறிக்கை நேற்று ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் சர்பியா மற்றும் குரேஷியா நாடுகள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பதை கண்டறிந்துள்ளதாக ஆணைக்குழு தமது அறிக்கையில் கூறியுள்ளது.
ஆயுதமேந்தியவர்களால் பொது மக்கள் பட்டினி போடப்பட்டதாக கூறப்படுவது மிகைப்படுத்தப்பட்டதொன்றாகும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், யுத்த சூனிய வலயங்களாக எந்த பிரதேசங்களும் காணப்படவில்லை என கூறியுள்ள ஆணைக்குழு, அந்த பகுதிகளில் இராணுவத்தினரால் மேற்கொள்ளபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளும் உண்மைக்கு புறம்பானது என தனதறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
விடுதலைப்புலிகளால் யுத்த சூனிய வலயங்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதிக்கட்ட யுத்ததின் போது ஏராளமான பொதுமக்கள் விடுதலை புலிகளால் மனித கேடயங்களாக பயன்படுத்தப்பட்டமையாலேயே சிவிலியன்கள் பலர் கொல்லப்பட்டதாக காணாமற் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு கூறியுள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் இலங்கையின் விசேட நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட குழுவினாலேயே விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன் அந்த குழுவில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு அனுமதியில்லை எனவும் அறிக்கையில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.
விபரங்கள்
கிளிநொச்சி மாவட்டம் முதலாவது அமர்வு – 18 – 21, ஜனவரி, 2014
சாட்சியங்களுக்காக அழைக்கப்பட்டோர் – 154
சாட்சியமளித்தோர் – 150
புதிய முறைப்பாடுகள் – 150
தமிழீழ விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டோர் – 80%
பாதுகாப்புப் படை மற்றும் ஏனையோரால் கடத்தப்பட்டோர் - 20%
கிளிநொச்சி மாவட்டம் இரண்டாவது அமர்வு – 22 – 30, செப்டெம்பர், 2014
சாட்சியங்களுக்காக அழைக்கப்பட்டோர் – 192
சாட்சியமளித்தோர் – 150
புதிய முறைப்பாடுகள் – 100
தமிழீழ விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டோர் – 70%
பாதுகாப்புப் படை மற்றும் ஏனையோரால் கடத்தப்பட்டோர் - 20%
அடையாளம் தெரியாதவரகளால் கடத்தப்பட்டோர் – 10%
யாழ்ப்பாணம் மாவட்ட அமர்வு – 14 – 17, பெப்ரவரி, 2014
சாட்சியங்களுக்காக அழைக்கப்பட்டோர் – 244
சாட்சியமளித்தோர் – 180
புதிய முறைப்பாடுகள் – 804
தமிழீழ விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டோர் – 10%
பாதுகாப்புப் படையினரால் கடத்தப்பட்டோர் - 49%
அடையாளம் தெரியாதவரகளால் கடத்தப்பட்டோர் – 36%
ஏனையோரால் கடத்தப்பட்டோர் – 5%
யாழ்ப்பாணம் மாவட்ட அமர்வு – 14 – 17, பெப்ரவரி, 2014
சாட்சியங்களுக்காக அழைக்கப்பட்டோர் – 244
சாட்சியமளித்தோர் – 180
புதிய முறைப்பாடுகள் – 804
தமிழீழ விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டோர் – 10%
பாதுகாப்புப் படையினரால் கடத்தப்பட்டோர் - 49%
அடையாளம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டோர் – 36%
ஏனையோரால் கடத்தப்பட்டோர் – 5%
முல்லைத்தீவு மாவட்டம் முதலாவது அமர்வு – 5 – 8, ஜுலை, 2014
சாட்சியங்களுக்காக அழைக்கப்பட்டோர் – 230
சாட்சியமளித்தோர் – 129
புதிய முறைப்பாடுகள் – 398
தமிழீழ விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டோர் – 90%
அடையாளம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டோர் – 8%
பாதுகாப்புப் படையினரால் கடத்தப்பட்டோர் - 2%
முல்லைத்தீவு மாவட்டம் இரண்டாவது அமர்வு – 2 – 5, நவம்பர், 2014
சாட்சியங்களுக்காக அழைக்கப்பட்டோர் – 231
சாட்சியமளித்தோர் – 169
புதிய முறைப்பாடுகள் – 331
தமிழீழ விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டோர் – 75%
அடையாளம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டோர் – 10%
பாதுகாப்புப் படையினரால் கடத்தப்பட்டோர் - 15%
மட்டக்களப்பு மாவட்டம் முதலாவது அமர்வு – 20 – 22, மார்ச், 2014
சாட்சியங்களுக்காக அழைக்கப்பட்டோர் – 161
சாட்சியமளித்தோர் – 132
புதிய முறைப்பாடுகள் – 1287
தமிழீழ விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டோர் – 70%
அடையாளம் தெரியாதவரகளால் கடத்தப்பட்டோர் – 5%
பாதுகாப்புப் படையினரால் கடத்தப்பட்டோர் - 20%
ஆயுதக் குழுக்கள் – 5%
மட்டக்களப்பு மாவட்டம் இரண்டாவது அமர்வு – 6 – 9, ஜுன், 2014
சாட்சியங்களுக்காக அழைக்கப்பட்டோர் – 196
சாட்சியமளித்தோர் – 200
புதிய முறைப்பாடுகள் – 213
தமிழீழ விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டோர் – 70%
அடையாளம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டோர் – 5%
பாதுகாப்புப் படையினரால் கடத்தப்பட்டோர் - 20%
ஆயுதக் குழுக்கள் – 5%
வவுனியா மாவட்டம் அமர்வு – 14 – 17, டிசம்பர், 2014
சாட்சியங்களுக்காக அழைக்கப்பட்டோர் – 225
சாட்சியமளித்தோர் – 169
புதிய முறைப்பாடுகள் – 331
தமிழீழ விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டோர் – 60%
அடையாளம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டோர் – 10%
பாதுகாப்புப் படையினரால் கடத்தப்பட்டோர் - 30%
மன்னார் மாவட்டம் அமர்வு – 8 – 11, ஒகஸ்ட், 2014
சாட்சியங்களுக்காக அழைக்கப்பட்டோர் – 230
சாட்சியமளித்தோர் – 129
புதிய முறைப்பாடுகள் – 398
தமிழீழ விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டோர் – 80%
அடையாளம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டோர் – 10%
பாதுகாப்புப் படையினரால் கடத்தப்பட்டோர் - 10%
மேலும் திருகோணமலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் கடந்த வருடம் நடத்தப்பட்ட அமர்வுகளின் விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
காணாமற்போதல்கள் மற்றும் கடத்தல்களுக்கு பிரதானமாக மூன்று பிரிவினர் காரணமாக இருந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, பாதுகாப்புப் படையினர், மற்றும் துணை இராணுவக் குழுக்கள் (கருணா குழு, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், இந்திய அமைதி காக்கும் படை) ஆகியனவே குறித்த கடத்தல்கள் மற்றும் காணாமற்போதல்களுக்கு காாரணமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, உறவினர்கள் வழங்கிய தகவல்களுக்கு அமைய 16 இடங்களில் வைத்தே காணாமற்போனவர்கள் மற்றும் கடத்தப்பட்டவர்கள் தொடர்பிலான சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் ஆணைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வீடுகள்
பாதுகாப்புப் படையினரின் சுற்றிவளைப்பு
வேலைத்தளம் அல்லது வேலைக்குச் செல்லும் வழி
கடைத்தொகுதி அல்லது விவசாய நடவடிக்கை
பாடசாலை செல்லும் அல்லது வீடு திரும்பும் வழி
பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்து ஆசிரியர்களை அச்சுறுத்தி மாணவர்களை அழைத்துச் செல்லல்
பொது போக்குவரத்தில் பயணிக்கையில்
இராணுவ முகாம்களை கடந்து செல்லல் குறிப்பாக இறுதி யுத்தம்
சோதனைச் சாவடிகள்
வைத்தியசாலைகள்
அகதி முகாம்கள்
வெள்ளை வேன்
கால்நடைகளை மேய்க்கையில்
நண்பர்கள் உறவினர்கள் வீடுகளுக்கு செல்கையில்
கிணற்றில் குளிக்கச் செல்கையில்
விறகு வெட்டச் செல்கையில்
No comments
Post a Comment