Latest News

February 24, 2016

கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்த தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்!-டக்ளஸ்
by admin - 0

டக்கு மாகாணத்தில் கடற்றொழிலில் ஈடுபடும் மக்களது வாழ்வாதாரங்களை மேம்படுத்தத் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்.

               இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், வடக்கில், குறிப்பாக, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைதீவு மாவட்டங்களில் கடற்றொழிலில் ஈடுபடுகின்ற மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். இயந்திரப் படகுகள், வலைகள் என்பன போதியளவு இல்லாமைக் காரணமாக அம் மக்களது வாழ்வாதாரங்கள் மேம்படாத நிலையே காணப்படுகின்றது.

              அத்துடன், கடற்றொழிலில் ஈடுபடும் மக்களின் வசதி கருதி பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளும் மேற்கொள்ளப்பட வேண்டியத் தேவைகள் இன்னும் நிலவுகின்றன. இவற்றை அவதானத்தில் கொண்டு, உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சு முன் வர வேண்டுமென செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

என்று ஈபிடிபி ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது 
« PREV
NEXT »

No comments