விடுதலைப் புலிகள் அமைப்பை ஐரோப்பிய ஒன்றியத்தினால் தடை செய்யப்பட்டமை சமாதானத்தை ஏற்படுத்த தடையாக அமைந்தது.
மேலும் அந்த நடவடிக்கை விடுதலைப் புலிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுடன் அரசியல் தலைவர்கள், இராஜதந்திரிகள் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால், அரசியல் தீர்வுத் திட்டமொன்றை எட்ட வழியமைக்கப்பட்டிருக்கும் என இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவரும், அந்த நாட்டின் முன்னாள் அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் விடுதலைப் புலிகளுக்குத் தடை விதிப்பதில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் முக்கிய பங்காற்றியிருந்தார். கதிர்காமரின் இந்த நடவடிக்கை தவறானது என்றே கருதுகின்றேன்.
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுடன் அரசியல் தலைவர்கள், இராஜதந்திரிகள் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால், அரசியல் தீர்வுத் திட்டமொன்றை எட்ட வழியமைக்கப்பட்டிருக்கும்” என்றும் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்
No comments
Post a Comment