கிளிநொச்சி மயானத்தில் மணல் கொள்ளை கண்டுகொள்ளாத கிளிநொச்சி பொலிசார்.
கிளிநொச்சியில் வட்டக்கச்சி பன்னங்கண்டி பாலத்தின் அருகில் உள்ள பொது மயனப்பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வுகள் இடம்பெற்றுவருவது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட பாராளமன்ற உறுப்பினரர் சிவஞனம் சிறிதரனிடம் மக்கள் முறைப்பாடுகளை தெரிவித்திருந்தனர்.
இதனை அடுத்து இன்று காலை 11.00மணியளவில் சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற பாராளமன்ற உறுப்பினர் அங்குள்ள நிலைமைகளை அவதானித்தார் அங்கு மயானப்பகுதி முழுவதும் மணல் அகழப்பட்டுக்கொண்டுடிருந்தது.
மயானத்தில் புதைக்கப்பட்ட சடங்களை வெளியே எடுத்துவைத்துவிட்டுக்கூட மணல் அகழ்வு மிகமோசமான முறையில் நடைபெற்றுக்கொண்டு இருந்ததுடன் சடலங்கள் எரியுட்டப்படும் இடங்கள் கூட மண் கொள்ளையர்களினால் அள்ளப்பட்டுள்ளது. பாரிய கிடங்குகளாக தோண்டப்பட்டுள்ள இப்பகுதிக்குள் பன்னங்கண்டி ஆறு உடைத்து உள்ளநுழைந்திருப்பதை காணக்கூடியதாக இருந்தது. மிகமோசமான சூழல் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் அதிர்ச்சிகரமான இந்தநிலைமை குறித்து சம்பவ இடத்தில் இருந்து கிளிநொச்சி பொலீஸ் பொறுப்பதிகாரிக்கு பாராளமன்ற உறுப்பினர் சிறீதரன் அறிவித்தபோதும் அவர்கள் ஒன்றரைமணிநேரமாக சம்பவ இடத்திற்க்கு வருகைதரவில்லை.
சம நேரத்தில் வீதியால் வந்த ரோந்து பொலீசாரpடம் இவ்விடயம் குறித்து தெரியப்படுத்திய போதும் கவனத்தில் எடுக்காமால் மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களின் உழவியந்திரத்தை எடுத்து செல்வதற்கு கால அவகாசத்தை வழங்கினர்.
இந்த சம்பவத்தில் அப்பகுதியில் கூடிய மக்கள் இம்மண் கொள்ளை தினசரி நிகழ்வதாகவும் இது பொலீசாருக்கும் தெரியும் என்றும் இதன்பின்னனியில் பலரது தொடர்புகளும் பணப்பரிமாற்றங்களும் இருப்பதாகவும் தெரிவித்தனர். இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அவர்களின் கவனத்திற்க்கும் பாராளமன்ற உறுப்பினர் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
No comments
Post a Comment