யாழ். பல்கலைக்கழகத்தினுள் இன்று (புதன்கிழமை) காலை காணப்பட்ட சுவரொட்டிகளால் அங்கு, கற்றல் நடவடிக்கைகளுக்காக வந்த மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
யாழ். பல்கலைகழத்திற்கு முன்புறமாக பௌத்த விகாரை தேவை (We need a buddist temple in front of university of Jaffna) என யாழ். பல்கலைகழக பௌத்த மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளதாக குறித்த சுவரொட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏ4 அளவிலான தாள்களில் பிரதி பண்ணப்பட்ட இவ்வாறான சுவரொட்டிகள் யாழ். பல்கலைகழக வளாகத்தின் பல பகுதிகளில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்து, இஸ்லாமிய, பௌத்த, கிறிஸ்தவ மாணவர்கள் சமத்துவமாக பல ஆண்டுகளாக கல்வி கற்றுவரும் யாழ். பல்கலைக்கழகத்தினுள், இவ்வாறான அநாமதேய நடவடிக்கைகள் தேவையற்ற பிரச்சனைகளைத் தோற்றுவிக்கும் என கல்வியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

No comments
Post a Comment