Latest News

January 27, 2016

ஆசிரிய ஆலோசகர்களது கவனயீர்ப்பு போராட்டம் புதன்ன்று.
by admin - 0

ஆசிரிய ஆலோசகர்களது கவனயீர்ப்பு போராட்டம் புதனன்று.

அகில இலங்கை ஆசிரிய ஆலோசகர் சங்கத்தினரால் இலங்கையின் ஒன்பது மாகாணக்கல்வித்திணைக்களங்களுக்கும் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டமொன்று எதிர்வரும் புதன் கிழமை 26ம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளது. 
கடந்த 53 வருடங்களாக கல்வித்துறையில் பணியாற்றி வரும் ஆசிரிய ஆலோசகர்கள் தமக்கென தனியான ஒரு சேவை உருவாக்கப்பட வேண்டும் என பல வழிகளில் கோரி வந்துள்ளனர். 
இதற்கமைய தனியான சேவை உருவாக்கவென 2007ல் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்தும், 315/2009 வழக்கிற்கான மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்புக் கிடத்தும் , விமலதர்ம எக்கநாயக்க ஆணைக்குழு (2001) , குமாரசிறி ஆணைக்குழு (2003) , சிறிவர்த்தன ஆணைக்குழு (2004), மகிந்த மடிஹேவா ஆணைக்குழு (2014) ஆகிய நான்கு ஆணைக்குழுக்களின் சிபார்சு கிடைத்தும் இதுவரை தனியான சேவை உருவாக்கப்படாமையைக் கண்டித்தே இக்கவனயீர்பு நடைபெறவுள்ளது.
அதற்கமைய வடக்கு மாகாணத்துக்கான போராட்டம் 27ம் திகதி மருதனார் மடத்திலுள்ள வடமாகாணக் கல்வித்திணைக்களத்திற்கு முன்பாக நடைபெறவுள்ளது. 
இதில் வடமாகாணத்திற்குட்பட்ட 12 கல்வி வலயங்களையும் சேர்ந்த அனைத்து ஆசிரிய ஆலோசகர்களையும் கலந்து கொள்ளுமாறு வடமாகாண ஆசிரிய ஆலோசகர் சங்கத் தலைவர் தி.சிவரூபன் அறிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments