தமிழ் மக்கள் பேரவையின் நிபுணர் குழுவால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுத்திட்ட முன்வரைபு எதிர்வரும் 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் சம்பிரதாய பூர்வமாக வெளியிட்டு வைக்கப்படும்.
வடக்கு மாகாண முதலமைச்சர் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் வடக்குக் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த புத்திஜீவிகள், பொது அமைப்புகளின் பிரதி
நிதிகள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொள்வர்.
தமிழ் மக்கள் பேரவையால் முன்வைக்கப்படும் இத்தீர்வுத் திட்ட முன்வரைபானது எதிர்வரும் 31ஆம் திகதிக்குப் பின்னர் வட க்கு-கிழக்கு மாகாணங்களிலுள்ள அனைத்து மக்களிடமும் எடுத்துச் செல்லப்பட்டு மக் களின் கருத்துக்கள் பெறப்படுமென பேரவையின் ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.
No comments
Post a Comment