Latest News

January 27, 2016

இலங்கை கடற்படையினரின் வெறித்தனம்… 6 வயது தமிழ் சிறுவன் “பலாத்காரம்” செய்து படுகொலை!இலங்கை கடற்படையினரின் வெறித்தனம்… 6 வயது தமிழ் சிறுவன் “பலாத்காரம்” செய்து படுகொலை!
by admin - 0

இலங்கை கடற்படையால் 6 வயது தமிழ்ச் சிறுவன் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்ட சம்பூரில் சில மாதங்களுக்கு முன்னர் தமிழர்கள் மீண்டும் குடியமர்த்தப்பட்டனர்.

இந்நிலையில் சம்பூர் 7-வது வட்டாரத்தைச் சேர்ந்த குகதாஸ் தர்சன் என்ற 6 வயது சிறுவனை காணவில்லை என அவரது பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்திருந்தனர். இந்த புகாரின் அடிப்படையில் சிறுவனை தேடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

அப்போது சம்பூரில் இலங்கை கடற்படை முகாம் அருகே உள்ள பாழடைந்த கிணற்றில் தர்சன் உடல் மிதப்பதாக தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் தர்சனின் உடலை மீட்டனர்.

தர்சனின் வயிற்றில் கல்லை கட்டி கிணற்றில் கொலைகாரர்கள் போட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

தர்சன் காணாமல் போன நாளன்று கடைசியாக இலங்கை கடற்படையினர்தான் அழைத்து சென்றதாக நேரில் பார்த்த சிறுவர்கள் சாட்சியமளித்துள்ளனர். தர்சனை ஓரின சேர்க்கைக்குள்ளாக்கி இலங்கை கடற்படையினர் கொலை செய்துவிட்டு கிணற்றில் போட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

இது தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இச்சம்பவம் மீண்டும் குடியேறியுள்ள தமிழர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. என இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments