Latest News

December 28, 2015

ஊடகவியலாளர் தாக்குதல் விவகாரம்: நாளை அடையாள அணிவகுப்பு
by admin - 0

வவுனியா நகரில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த போது ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் நாளை அடையாள அணிவகுப்பு இடம்பெறவுள்ளது.

கடந்த வியாழக்கிழமை வவுனியா நகரசபையினால் போக்குவரத்துக்கு இடையூறாக வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டவர்களை அகற்றிய போது வர்த்தகர்களுக்கும், நகரசபைக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது. இதனை பதிவு செய்து செய்தி சேகரித்த ஊடகவியலாளர் ஒருவர் மீது வர்த்தகர் ஒருவரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா மாவட்ட நீதிபதி எஸ்.இராமக்கமலன் உத்தரவிட்டார்.

மேலும் இந்த நிலையில் இன்றைய தினம் மீண்டும் குறித்த விடயம் விசாரணைக்கு கொண்டு வரப்பட்ட போதும், விசாரணைகள் இடம்பெறாது நாளை அடையாள அணிவகுப்புக்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
« PREV
NEXT »

No comments