பயங்கரவாத தடைச் சட்டம் ரத்து செய்வது குறித்து ஆராயப்பட்டு வருவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளுக்கு நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து தெளிவுபடுத்தப்பட உள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்து வேறும் ஓர் சட்டத்தை எவ்வாறு அறிமுகம் செய்வது என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். இதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு பதலீடான சட்டமொன்றை அறிமுகம் செய்வது குறித்து சட்ட ஆணைக்குழுவினதும் கருத்தும் கோரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்து செய்யப்படக்கூடிய சாத்தியம் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment