Latest News

December 28, 2015

நாம் பின்கதவால் வந்தவர்களல்ல, முன் கதவால் வந்தவர்கள் - வடக்கு முதல்வர்
by admin - 0

தமிழ் மக்கள் பேரவையில் உள்ள எவரும் பின் கதவால் வந்தவர்கள் அல்ல, அனைவருமே முன் கதவால் வந்தவர்கள்.என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையின் இரண்டாம் கட்ட கூட்டம் ஞாயிறு காலை யாழ்.பொது நூலக மண்டபத்தில் இடம்பெற்றது. அக் கூட்டத்தின் முடிவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலையே  அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

தமிழர்களின் நிலம் , மொழி, கலாச்சாரம் ,  பண்பாடுகள் , இல்லாது அழிந்து போக கூடாது என்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பக்க பலமாக இருக்க தான் முயற்சிகளை மேற்கொண்டு உள்ளோம்.

தமிழ் மக்கள் பேரவையில் உள்ள எவரும் பின் கதவால் வந்தவர்கள் அல்ல, அனைவருமே முன் கதவால் வந்தவர்களே.. எமது கொள்கையினை கூறி அழைத்தோம். வந்தார்கள். பேரவையில் இணைத்துகொண்டோம். எமது கொள்கைகளை ஏற்றுக் கொள்பவர்கள் யார் என்றாலும் பேரவையுடன் இணைந்துக் கொள்ளலாம். அது பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆக இருந்தாலும், இணைந்து கொள்ளலாம்.

புதிய அரசியல் அமைப்பு யாப்பு உருவாக்கபடும் போது, தமிழர்களின் உரித்துக்கள் ஆராயப்பட்டு , புரிந்து கொள்ளப்பட்டு அவை யாப்பில் உள்ளடக்கப்பட வேண்டும்.

எனவே தான் நாம் அனைத்து விதமான மக்களையும் சந்தித்து அவர்களிடம் இருந்து தீர்வு திட்டம் தொடர்பிலான கருத்துகளை பெற உள்ளோம், அதன் அடிப்படையிலையே புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட வேண்டும்.

புதிதாக உருவாக உள்ள அரசியல் யாப்பில் தமிழ் மக்களின் உரித்துக்கள் எவ்வாறு அமைய வேண்டும் என்பதனை மக்களே தீர்மானிக்க வேண்டும்.

தமிழ் மக்களின் கரிசனைகளை , கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்து கூறுவோம்.அதற்காக இந்த அமைப்பினை பலப்படுத்த பல நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளோம்.

மக்கள் மத்தியில் விரிவுபடுத்தப்பட்டு , மக்கள் எழுச்சி ஏற்பட்டு , மக்கள் மத்தியில் பலமான இயக்கமாக மக்கள் பேரவை உருவாகும் என தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments