இலங்கையிலிருந்து 45 ஐ.எஸ். தீவிரவாதிகள் சிரியாவுக்கு சென்றிருப்பதாக புலனாய்வுப் பிரிவினர் எச்சரித்துள்ளனர்.
தெஹிவளை, கொலன்னாவை, குருநாகல் ஆகிய இடங்களில் இருந்தே மேற்குறித்த ஐ.எஸ். தீவிரவாதிகள் சிரியாவுக்குச் சென்றிருப்பது தெரியவந்துள்ளது.
மேலும் இலங்கையில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் செயற்பாடுகள் குறித்து இலங்கைக்கு நெருக்கமான இரண்டு நாடுகளிலிருந்து எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
மேற்குறித்த எச்சரிக்கை மற்றும் விசாரணைகளின் அடிப்படையில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்குச் சார்பானவர்களின் செயற்பாடுகள் இலங்கையில் அதிகரித்து வருவதாக புலனாய்வுத்துறையினர் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அறிக்கை ஒன்றையும் கையளித்துள்ளனர்.
இலங்கையில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் தளமாக கிழக்கு மாகாணம் இருப்பதாகவே பலரும் நம்பிக் கொண்டிருந்தனர்.
ஆனாலும் கண்டி, குருநாகல், கொலன்னாவை , தெஹிவளை போன்ற பிரதேசங்களிலேயே ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கான ஆதரவுப்போக்கைக் கொண்டோர் இருப்பதாக தற்போது தெரிய வந்துள்ளது.
No comments
Post a Comment