நுவரெலியா நகரத்தில் இருந்து கண்டி நோக்கி சென்ற பாரவூர்தி ஒன்று கொத்மலை வெதமுல்ல தொழிற்சாலைக்கு செல்லும் சந்தியில் பாதையை கடக்க முயன்ற பெண் ஒருவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றது. இச்சம்பவத்தில் 31 வயதான வரதராஜ் சந்திரகலா என்ற இளம் குடும்பப் பெண்ணே உயிரிழந்தவராவார்.
இப் பெண் நுவரெலியா லபுக்கலை தோட்டத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து வெதமுல்லை கடை ஒன்றுக்கு சென்ற போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவ இடத்தில் இருந்து லொறியை அகற்றவிடாமல் அப்பகுதி மக்கள் சுற்றி வளைத்துள்ளனர். இதேவேளை அங்கு விரைந்த பொலிஸாரால் பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டதன் பின் அப்பகுதி மக்கள் கலைந்து சென்றுள்ளனர்.
தற்போது, உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கொத்மலை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு,சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொத்மலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments
Post a Comment