வவுனியா பொது வைத்தியசாலையில் இருந்து 400 மீற்றர் தூரத்தில் வவுனியா மன்னார் வீதியில் காமினி மகா வித்தியாலயத்தின்கு முன்பாக அமைந்துள்ள வீதியின் இன்றைய நிலையே இது.
கடந்த 3 நாட்களில் இவ்விடத்தால் சென்றபோது 2 விபத்துக்களை அவதானிக்கமுடிந்தது. விபத்திற்குட்பட்ட ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாலம் கட்டும் வேலை மழை காரணமாக இடைநடுவில் கைவிடப்பட்டிருப்பதனால் மழை நீர் பள்ளங்களில் தேங்கிநிற்பதன் காரணமாக அவற்றின் ஆழம் தெரியாமல் வாகன சாரதிகள், குறிப்பாக துவிச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் வண்டி ஓட்டுணர்கள் அவதிப்படுவதுடன் அப்பள்ளங்களில் விழுந்தெழும்ப வேண்டிய நிலை ஏற்படுகின்றது. பள்ளங்களின் ஆழம் காரணமாக வாகனங்களின் அடிப்பகுதி நிலத்துடன் உரசுமளவிற்கு இருக்கின்றது. அத்துடன் வாகனப்போக்குவரத்து மிக்க இவ்வீதியில் பள்ளங்களை தவிர்ப்பதற்காக வாகன சாரதிகள் குறுக்கும்நெடுக்குமாக வாகனங்களை செலுத்துவதனால் விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது.
எனவே, இதற்கு காரணமானவர்கள் இவ்வீதியை செப்பனிடுவதற்கான உரிய நடவடிக்கைகளை எடுப்பார்களேயானால் இவ்வீதியால் பயணிக்கும் மக்களின் அசௌகரியங்கள் குறைவதுடன் விபத்துக்களும் தடுக்கப்படும்.
மழை காரணமாக பாலம் கட்டும் பணி தாமதமாகுமெனில் அவ்விடத்தில் உள்ள அபாயகரமான பள்ளங்களை தற்காலிகமாகவாவது நிரவுவதற்கு உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொண்டால் நன்று.என வீதியால் பயணிப்போர் தெரிவித்துள்ளனர்.
No comments
Post a Comment