Latest News

December 11, 2015

காத்திருக்கிறது அழிவு! இந்தியா, இலங்கையில் பேய் மழை! ஐ.நா எச்சரிக்கை!
by Unknown - 0

இந்தியா, இலங்கை உள்பட பல தென்னிந்திய நாடுகளில் பேய்மழை காரணமாக, கடுமையான வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்படும். வழக்கத்தை விட அதிகமான மழை பெய்யும். புறநகர் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படலாம்  என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

ஐநா: பருவநிலை மாற்றங்கள ஏற்படுத்தி வரும் தாக்கத்தால், தென்னிந்தியாவில் வழக்கத்திற்கு மாறாக வரும் பிப்ரவரி மாதம் வரை மழை தொடரக்கூடும் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. பூமத்திய ரேகைக்கு அருகேயுள்ள பசிபிக் கடல் பரப்பு மற்றும் அதன் வான் பகுதிகளில் ஏற்படும் வெப்ப சலனங்கள் காரணமாக ஏற்படும் மாற்றங்கள் ‘‘எல் நினோ’’, விளைவு எனப்படுகிறது.

கடந்த 1998ம் ஆண்டு தொடங்கி கணிக்கப்பட்டு வரும் எல் நினோ விளவுகள், ஆசிய மற்றும் பசிபிக் பகுதிகளில் தற்போது வலுவான மாற்றங்கள் ஏற்படுத்தி வருவதாக கண்டறியப்பட்டு இருக்கிறது. அடுத்தாண்டின் தொடக்க காலம் வரை இது நீடிக்கும் என்று கருதப்படுகிறது. 

இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் மற்றும் ரைம்ஸ் சமூகக் குழுவும் கூட்டாக இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வானிலை மாற்றங்களால் ஏற்படும் ஆபத்துகளில் இருந்து தப்பிக்கவும், புவி வெப்பமடைவதை தடுக்கவும், நீண்டகால உத்திகளை மேற்கொள்ளும் வகையில் நாடுகளிடையே, மண்டல அளவிலான கூட்டு ஆதரவு முக்கியம். தென்னிந்தியா, மத்திய இந்தியா, கம்போடியா, தெற்கு பிலிப்பைன்ஸ், மத்திய, வடகிழக்கு தாய்லாந்து போன்ற பகுதிகளில் எல் நினோ விளைவு கடுமையாக தொடரும் அபாயம் உள்ளது.

இந்தியா, இலங்கை உள்பட பல தென்னிந்திய நாடுகள் பேய்மழை காரணமாக, கடுமையான வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்படும். வழக்கத்தை விட அதிகமான மழை பெய்யும். புறநகர் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படலாம். அதே சமயம், எல் நினோ பாதிப்பு, பபுவா நியு கினியா, திமூர்-லெஸ்டே, வனுயடு போன்ற பகுதிகளில் கடுமையான பஞ்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அப்பகுதிகளில், தண்ணீர் பற்றாக்குறை, உணவு தட்டுப்பாடு ஆகியவை நீடித்து வருகின்றது.

இதேவேனை, பிரான்ஸ் தலைநகர் பாரீசில், நடைபெற்ற ஐநா பருவநிலை மாற்ற மாநாட்டில் முக்கியமான ஒப்பந்தம் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பருவகால மாற்றங்களை சமாளிக்கவும், பசுமை திட்டங்களுக்கும் ஏழை மற்றும் வளர்ந்து வரும் நாடுகளுக்கு வளர்ச்சி அடைந்த நாடுகள் 6 லட்சம் கோடி நிதியுதவி அளிக்கும் தீர்மானம் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ‘‘இன்று காலை அறிவிக்கப்படும் தீர்மானம், மதியம் முடிவு செய்யப்படும்’’ என பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் லாரெண்ட் பேபியஸ் கூறியுள்ளார்.

கடந்த வாரம் சென்னையில் கொட்டித் தீர்த்த மழையினால் சென்னை நகரமே வெள்ளக்காடாக மாறியதுடன், பல லட்சம் பெயர் இடம் பெயர்ந்ததுடன், பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களையும் இழந்தனர்.

இந்நிலையில் மீண்டும் அடுத்தாண்டு மாசி மாதம் வரை கடும் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளமையானது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
« PREV
NEXT »

No comments