Latest News

December 11, 2015

40 அடி உயரம் கொண்ட நத்தார் மரம்
by admin - 0


மட்டக்களப்பில் நத்தார் பண்டிகையினை கொண்டாடும் வகையில் மட்டக்களப்பு மாநகரசபையின் ஏற்பாட்டில் 40 அடி உயரம் கொண்ட நத்தார் மரம் காந்திப் பூங்காவில் நேற்று இரவு திறந்து வைக்கப்பட்டது.

மீள்சுழற்சிக்குரிய கழிவுப்பொருட்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பிளாஸ்டிக் போத்தல்களினால் உருவாக்கப்பட்டு ஒளியூட்டப்பட்ட நத்தார் மரம் காண்போரை ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா நேற்று இரவு மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன், மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் சம்மேளன தலைவர் எஸ்.செல்வராசா மற்றும் வர்த்தக சங்க பிரதிநிதிகள், மாநகரசபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் மாநகரசபையினால் கழிவு போத்தல்கலால் அலங்கரிக்கப்பட்டுள்ள அலங்கார கிறிஸ்மஸ் மரத்தின் அழகுபடுத்த படங்கள்









« PREV
NEXT »

No comments