Latest News

December 05, 2015

ஈழத்தமிழர்களுக்கான அனைத்துலக நீதி : நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் நாள் அரசவை அமர்வில் விவாதம் !
by Unknown - 0

அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் இடம்பெற்று வரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வில் ஈழத்தமிழர்களுக்கான அனைத்துலக நீதி எனும் தொனிப் பொருளிலில் முக்கிய விவாதம் இடம்பெற்று வருகின்றது.

டிசெம்பர் 4ம் நாள் வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ள அரசவை அமர்வு மூன்று நாள் கூட்டத் தொடராக இடம்பெறுகின்றது.

இடம்பெற்று வரும் இந்த முக்கிய விவாதத்தினை பேராசிரியர் சொர்ணராஜா அவர்கள் தலைமை தாங்கி நடத்துவதோடு, பேராசிரியர் குறூம் அவர்கள் முதன்மைக் கருத்துரையினை வழங்கி வருகின்றார்.

இதேவேளை இவ்அமர்வில் பங்கெடுத்துள்ள அனைத்துலக சட்டவாளர்களான டேவிட் மித்தாஸ், கரேன் பார்க்கர், ஜில் பிக்குவா, மற்றும் பேராசிரியர் பீற்றர் சார்க ஆகிய வளப் பெருமக்களும் விவாதத்தில் பங்கெடுத்து வருகின்றனர்.

உலக்தமிழர்களின் பலத்தினை கட்டியெழுப்புதல், ஈழத் தமிழர்களுக்கான அனைத்துலக நீதி ஆகிய விடயங்களை மையப்பொருளாக கொண்டு நேற்று வெள்ளிக்கிழமை (டிசம்பர்4 ) அமர்வு தொடங்கியிருந்தது.

புலம்பெயர் தேங்களில் இருந்தும் நா.தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர்கள், மேற்சபைப் பிரதிநிதிகள் இவ்விரு இடங்களிலும் கூடியுள்ளனர்.

தொடக்கநாள் நிகழ்வில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது தொடக்கவுரை மற்றும் வளப்பெருமக்களின் சிறப்புரைகள் முதல் அமர்வில் இடம்பெற்றிருந்தது.

தொடர்ந்து இரண்டாம் அமர்வில் பிரதமர் பணிமனைச் செயலர்,அமைச்சர்கள் மற்றும் மையத்தலைவர்கள் தங்களது செயற்பாட்டு அறிக்கையினை அவையில் சமர்பித்திருந்தனர்.

அறிக்கைகள் தொடர்பிலான கேள்வி-பதில், கருத்துரைகள் விவாதங்கள் அவையில் இடம்பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.




« PREV
NEXT »

No comments