இயற்கையின் கடும் சீற்றத்தினால் பேரிடரினை சந்தித்திருக்கும் தமிழகத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது தோழமையினைத் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் இடம்பெற்று வரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நேரடி அரசவை அமர்வின் தொடக்க நாள் நிகழ்வின் இந்தோழமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தினை ஆட்கொண்ட கடுமையான மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினாhல் உயிரிழந்தவர்களுக்கும், உயிர்மீட்கும் பணியின் போது உயிர்நீத்தவர்களுக்கும் என தமிழ உறவுகளுக்கு எல்லோருக்குமாக தனது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை ஒரு கணம் எழுந்து நின்று மௌனம் காத்து தனது கவலையினையும் தோழமையினைiயும் வெளிப்படுத்தியுள்ளது.
தமிழக இயற்கை பேரிடர் துயர் தணிப்பு நிதியம் எனும் பெயரில் செயற்திட்டமொன்று இந்த அவை அமர்வின் போது உருவாக்கப்பட்டிருந்ததோடு, குறியீடாக அரசவை பிரதிநிதிகள் மற்றும் ஆதாரவாளர்கள் இந்திய நாண மதிப்பில் இரண்டு லட்சங்களை பங்களித்திருந்தனர்.
தமிழக இயற்கை பேரிடர் துயர் தணிப்பு நிதியத்தில் பங்கெடுக்க விரும்பும் புலம்பெயர் மக்கள் பேய்பல் மூலமாக பங்களித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, இதற்கென தனித்த இணையத்தளம் ஒன்று உருவாக்கப்படும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கதின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்திருந்தார்.
இதேவேளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தமிழக தோழமை மையத்தின் ஊடாக முதற்கட்டமாக இரண்டாயிரம் உணவுப் பொதிகள் வழங்குவதற்குரிய செயற்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
No comments
Post a Comment