நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது தவணைக்காலத்தின் நான்காவது நேரடி அரசவை அமர்வு எழுச்சியுடன் தொடங்கியது.
டிசெம்பர் 4ம் நாள் வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ள அரசவை அமர்வு மூன்று நாள் கூட்டத் தொடராக நியு யோர்க்கிலும் லண்டனிலும் கூடுகின்றது.
அமெரிக்காவின் நியு யோர்க்கில் மைய அமர்வு இடம்பெற, அதனோடு தொழில்நுட்ப பரிவர்தனைவழி இணைந்த துணை அமர்வாக லண்டனில் இடம்பெறுகின்றது.
தமிழகத்தில் இருந்து தோழர் தியாகு, பேராசிரியர் மணிவண்ணன், அனைத்துலக சட்டவாளர்கள் டேவிட் மித்தாஸ், கரேன் பார்க்கர், ஜில் பிக்குவா, மற்றும் பேராசிரியர் பீற்றர் சார்க், பேராசிரியர் குறூம் உட்பட வளப் பெருமக்கள் கலந்து கொள்கின்றனர்.
புலம்பெயர் தேங்களில் இருந்தும் நா.தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர்கள், மேற்சபைப் பிரதிநிதிகள் இவ்விரு இடங்களிலும் கூடியுள்ளனர்.
உலக்தமிழர்களின் பலத்தினை கட்டியெழுப்புதல், ஈழத் தமிழர்களுக்கான அனைத்துலக நீதி ஆகிய விடயங்களை மையப்பொருளாக கொண்டு கூடுகின்ற இந்த அரசவை அமர்வு இடம்பெறுகின்றது.
இதே வேளை , வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட நம் தொப்புள் கொடி உறவுகளான தமிழ்நாட்டு மக்களிற்காக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை கூட்டத்தில் நிதி சேகரிக்கப்பட்டது.
No comments
Post a Comment