Latest News

December 04, 2015

ஒதியமலை படுகொலையில் மரணித்த மக்களுக்கு அஞ்சலி !!!
by admin - 0

ஒதியமலை படுகொலையில் மரணித்த மக்களுக்கு அஞ்சலி !!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒதியமலை படுகொலை நாள் 02.12.2015 அன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒதியமலை கிராமத்தில் 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் திகதி அதிகாலை வேளையில் புகுந்த இராணுவத்தினர்,

அங்கிருந்த இளைஞர்கள் மற்றும் ஆண்களை சனசமூக நிலையத்திற்கு வரவழைத்துவிட்டு அவர்களது ஆடைகளை களைந்து அவற்றினால் அவர்களை கட்டி 27 பேரை சுட்டுப் படுகொலை செய்திருந்ததுடன், 5 பேரை கொண்டு சென்றனர். அவர்களும் பின்னர் கொல்லப்பட்டதாகவே உறவினர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில் படுகொலை செய்யப்பட்ட 32 பேரின் 31 ஆவது ஆண்டு நினைவுநாள் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.

ஒதியமலை பிள்ளையார் ஆலயத்தில் இறந்தவர்களின் ஆத்மா சாந்திப் பிரார்ந்தனையும், அவர்களுக்காக ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வட மாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன் மற்றும் து.ரவிகரன், படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், அப்பகுதி மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர்.

இதேவேளை, ஒதியமலைப் படுகொலை நினைவாக அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபி இறுதி யுத்தத்தின் பின் அழிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments