தமிழக வெள்ள பாதிப்பை பிரதமர் மோடி ஆய்வு செய்யும் படத்தை வெளியிட்ட மத்திய அரசு, அதில் போட்டோஷாப் மூலம் ஒட்டுவேலை செய்திருப்பது சமூக வலைதளங்களில் அம்பலமாகியது. இதனால் அவமானப்பட்டுப் போன மத்திய அரசு, ஒட்டுவேலை செய்த அந்த படத்தை நீக்கிவிட்டு ஒரிஜனல் படத்தை வெளியிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வரலாறு காணாத கனமழை வெள்ளத்தால் சென்னை மூழ்கிப் போனது. இந்த இயற்கை பேரவலத்தைப் பார்வையிட தனி விமானம் மூலம் நேற்று டெல்லியில் இருந்து அரக்கோணம் கடற்படை விமான தளத்துக்கு வருகை தந்தார் பிரதமர் மோடி
பின்னர் சென்னையில் ஆளுநர் ரோசைய்யா, முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோரையும் அவர் சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்ட படங்களை வெளியிட்டது மத்திய அரசின் ஊடகப் பிரிவான பி.ஐ.பி. அந்த படம் பி.ஐ.பி.யின் ட்விட்டர் பக்கத்தில் வெளியான உடனேயே அது 'போட்டோஷாப்பில்' சூப்பராக ஒட்டுவேலை செய்யப்பட்ட படம் என்பது அம்பலமானது.

No comments
Post a Comment