கடற்படை சிப்பாய் சிறைக்கு! வாகன அனுமதிப்பத்திரம் இல்லையாம்!
சனிக்கிழமை, டிசம்பர் 5, 2015 - மாணவி உசாந்தினியை மோதிக் கொலை செய்த கடற்படையினருக்கு சொந்தமான பேரூந்தை ஓட்டிச்சென்ற கடற்படைச்சிப்பாய் வாகனத்தை செலுத்தும் சாரதி அனுமதிப்பத்திரத்தைக் கொண்டிருக்கவில்லையென்பது அம்பலமாகியுள்ளது. கடற்படை சிப்பாய் ஊர்காவற்துறை பொலிசாரால் கைது செய்யப்பட்டு, இன்று யாழ் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையில் கடற்படை சாரதியை எதிர் வரும் 17ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே இன்று இறுதி கிரியைகளின் போது வன்முறைகள் ஏதும் நடைபெறலாமென்ற அச்சத்தில் காவல்துறையினர் வேலணையில் நிலைகொள்ள வைக்கப்பட்டுள்ளனர்.
No comments
Post a Comment