Latest News

December 05, 2015

யாழ் நூலகத்தை எரித்த காமினியை கொழும்பில் சிதறடித்த தமிழிச்சி......!!!! ஈழத்து துரோணர்..!!!
by admin - 0

யாழ் நூலகத்தை எரித்த காமினியை, கொழும்பில் சிதறடித்த தமிழிச்சி......!!!!

எழுபதுகளின் இறுதியில், சிங்கள அடக்கு முறைக்கு எதிராக தமிழர் கிளர்ந்தெழுந்த நேரம் அது.! சிங்கள பேரினவாத அடக்கு முறை, கட்டவிழ்த்து விடப்பட்ட காலத்தில், சிங்கள இராணுவ இயந்திரத்திற்கு எதிராக தமிழ் இளைஞர்கள் பல குழுக்களாக ஆயுதம் ஏந்தி போராட தலைப்பட்டபோது, விடுதலைப் புலிகள் மட்டுமே நிதானமாகவும், உறுதியாகவும் தமது இலக்கை நோக்கி நகர ஆரம்பித்திருந்தனர்.

அதுவரை சிறு சிறு தாக்குதலை மேற்கொண்டு வந்த புலிகள், எண்பதுகளின் தொடக்கத்தில், பெரும் பாய்ச்சல் ஒன்றிற்காக ஆயத்தமானார்கள். புலிகளமைப்பு ஆரம்பித்த காலம் தொடக்கம் (1972) மேற்கொண்ட தாக்குதலின் ஊடாகக் கிடைத்த அனுபவங்களைக் கொண்டு இந்தப் பாய்ச்சலுக்கான திட்டம் போடப்பட்டது.

இந்தத் தாக்குதலுக்கான வேவு நடவடிக்கையும், சீரான தகவல் பரிமாற்றமும், இறுக்கமாக ரகசியம் பேணியமையுமே இந்த வெற்றிக்கு பிரதானமாக இருந்தது. ஆம் 21 ஜூலை 1983 அன்று இரவு தலைவரின் நேரடி நெறியாள்க்கையில், செல்லக்கிளி அம்மானின் கட்டளையில் முதலாவது பெரும் கண்ணிவெடித் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

அன்று இரவு யாழ் குடாநாடே அதிர்ந்தது. 13 சிங்கள இராணுவத்தினர் மாண்டு போக (இதில் 8 இராணுவத்தினரை தலைவர் அவர்கள் தனது G3 துப்பாக்கியால் நிதானமாக சுட்டு வீழ்த்தியதாக கிட்டண்ணை அடிக்கடி கூறுவார்) சிங்களம் அதிர்ந்து போனது. ஒரே நேரத்தில் அதிக படையினர் கொல்லப்பட்ட முதலாவது தாக்குதல் இதுவாகும்.

இந்த தாக்குதலின் அதிர்வு சிங்கள தலைநகரை உலுப்பி இருந்தது. அந்த நேரத்தில் தான் சிங்கள ஜனாதிபதி J R ஜெயவர்த்தனா "போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்" என்று தமிழருடன் போர்ப் பிரகடனம் ஒன்றை வெளியிட்டு தமிழர் வேறு, சிங்களவர் வேறு என்று உலகத்திற்கு உணர்த்தினார்.

அதேநேரம் இராணுவ உடல்கள் கொழும்பு வரும் போது பெரும் இனக்கலவரம் ஒன்றை உருவாக்க J.R.ஜெயவர்த்தனாவின் தத்துப்பிள்ளைகளான காமினி திசநாயக்க, லலித் அத்துலக் முதலி மற்றும் சிறில் மத்தியு ஆகிய மூவரும் மிகப் பெரும் சதி ஆலோசனையில் ஈடுபட்டு, இனக்கலவரத்துக்கான திட்டமிடலை செய்தனர்.

திட்டத்தின் ஒரு அங்கமாக கடும் குற்றங்களுக்குத் தண்டனை பெற்று, சிறையில் இருந்த சிங்கள கைதிகளை வைத்து, அந்தநேரத்தில் சிறையில் இருந்த குட்டிமணி, தங்கத்துரை உட்பட ஏனைய போராளிகளை கொல்லவும் ஒழுங்கு செய்திருந்தனர்.

இந்த தாக்குதலை தனிப்பட்ட காரணம் ஒன்றிற்காக 1982ம் ஆண்டு இத்தாலிய விமானம் ஒன்றை கடத்த முற்பட்ட குற்றத்திற்காக தண்டனை பெற்று சிறையில் இருந்த சோமபல ஏக்கநாயக்க என்பவனே, இவர்களால் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தான். அதன்படி 54 போராளிகள் அவர்களால் கொல்லப்பட்டதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

அதனைத்தொடர்ந்து கொழும்பில் வசித்த தமிழ் மக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ள சிங்கள காடையர்களையும் ஆயத்தப்படுத்தியிருந்தனர். அதன்படி 23 ஜூலை 1983 அன்று இராணுவ உடல்கள் பொரளை கனத்த மயானத்தில் தகனம் செய்யப்பட்டதும், அங்கிருந்து புறப்பட்ட காடையர் குழு, தமது முதலாவது தாக்குதலை, அங்கிருந்தே ஆரம்பித்திருந்தது.

மூன்று நாட்கள் நடந்த இந்த இனப்படுகொலை கொழும்பில் பலநூறு தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியும், பல ஆயிரம் கோடி தமிழர் சொத்துகள் சூறையாடப்பட்டும், ஆயிரக்கணக்கில் வர்க்க வேறுபாடுன்றி தமிழர்கள் கொல்லப்பட்டும் இருந்தனர்.

இந்த கொழும்புத் தாக்குதலை லலித் நெறிப்படுத்த (இது தொடங்கிய பின் பிரேமதாசவும் இவர்களுடன் இணைந்திருந்தார்), அதே நேரம் யாழில் காமினியும், சிறில் மத்தியுசும் நேரடியாக நின்று இராணுவத்தின் உதவியுடன் படுகொலைகளை ஆரம்பித்தார்கள்.

யாழ் நகரில் கடைகள் எரிந்து கொண்டிருந்தபோதே, ஆசியாவிலேயே முதலாவது பெரிய நூலகமானதும், தமிழரின் அறிவுக் களஞ்சியமான யாழ் நூலகமும், காமினியின் மேற்பார்வையில் காடையர்களால் எரியூட்டப்பட்டது. பலநூறு ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்ட அரிய நூல்கள் எரியுண்டு போனது.

இந்தச் சம்பவத்தை கேள்வியுற்ற தாவீது என்னும் பாதிரியார் ஒருவர் மாரடைப்பினால் இறந்தார் போனார். இதிலிருந்து நீங்கள் தெரிந்தது கொள்ளலாம் தமிழருக்கு அந்த நூலகம் எவ்வளவு பிரதானமானதென்பதை.!

அனால் தமிழர் மீதான இந்த தாக்குதல், அவர்களின் போராட்டக் குணத்தை அடக்கி விடும் என்றே சிங்கள அரசு நம்பியது. ஆனால் நடந்ததோ நேர் மாறாக இருந்தது. தமிழரின் பகைமை வளர்ந்து, பல ஆயிரம் இளைஞர்களை போராட்டத்தில் குதிக்க வைத்தது.

இந்த பாதகத்தை நேரடியாக முன் நின்று மூளையாக செயற்பட்ட காமினி தான், அந்த நேரத்தில் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து, மகாவலித் திட்டத்தின் ஊடாக பெரும் சிங்களக் குடியேற்றத்தை தமிழர் நிலங்களில் செய்தவரும் இவரே.

ஆரம்ப காலம் தொடக்கம் தமிழர் விரோதப் போக்கை கொண்டிருந்தார் காமினி. இதனால் சிங்கள மக்கள் மத்தியில் மிகப்பெரும் செல்வாக்குடன் பல அமைச்சுப் பதவிகளையும் வகித்தார்.

காலம் சுழன்று 1994ம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தார். வேட்பாளருக்கான தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்திருந்த நேரம், தமிழர் தரப்பிற்கும் இக்கட்டான நேரம் அது. கடும் தமிழர் விரோத போக்குடைய காமினி ஜனாதிபதியாவதை புலிகளும், மக்களும் விரும்பவில்லை.

புலிகள் தலைமை காமினியை அகற்றும் முடிவை எடுத்ததும் அதற்கான செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்டது. புலனாய்வுச் சக்கரம் சுழல ஆரம்பித்தது. கொழும்பில் நடந்த அனைத்துப் பிரச்சார கூட்டங்களுக்கும் புலிகளும் சென்று வந்தனர்.

சிங்களத் தலைநகரில் அந்த நேரத்தில் பல புலிகளின் தாக்குதல் காரணமாக மிக இறுக்கமான சோதனைக் கெடுபிடிகள் தமிழர் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தது. இலக்கு கண்ணுக்கு தெரிந்த போதும் அதை நெருங்குவதற்கு திண்டாட வேண்டித்தான் இருந்தது. அந்த நேரத்தில் தமிழ் இளைஞர்கள் மேல் உள்ள சோதனைக் கெடுபிடியை விட, தமிழ்ப் பெண்கள் மீதான கெடுபிடிகள் சற்றுக் குறைவாகவே இருந்தது.

அதனால் தாக்குதல் பணி, பெண் போராளிகளிடமும் வழங்கப்பட்டிருந்தது. அதற்கான போராளியை மகளிர் தளபதி லெப். கேணல் அகிலாவால் தெரிவு செய்யப்பட்டு இலக்கு நோக்கி அனுப்பப்பட்டிருந்தார். தாக்குதலுக்கான இடமும், நேரமமும் சில புலனாய்வுத் தகவல்கள் மூலம் பெறப்பட்டிருந்தது.

அதன்படி 24/10/1994ம் ஆண்டு சிங்களத் தலைநகரில், பிரச்சாரக் கூட்டத்தில் வைத்து அந்த பெண் போராளியால் தமிழரின் நீண்ட நாள் எதிரி வெடிகுண்டினால் சிதறடிக்கப்பட்டான். பல ஆண்டு பழியை அந்த வீராங்கனை, தமிழர் சார்பில் நிறைவேற்றி இருந்தார்.

அன்று சிங்கள தேசத்திற்கு தமிழரால் ஒரு செய்தி சொல்லப்பட்டது. ! "எந்த ஒரு காலத்திலும் எங்கள் மேல் விதைத்த துன்பத்தை, உங்கள் மேல் ஒருநாள் நாமும் விதைப்போம்" என்பதே சிங்களத்திற்கான தமிழரின் செய்தியாகும்.! இது எந்தக் காலத்துக்கும் பொருந்தும்.

புலிகள் தலைமை எந்த ஒரு தாக்குதல் இலக்கையும் எழுந்தமானத்தில் தெரிவு செய்தது கிடையாது. புலிகள் தெரிவு செய்த தாக்குதல் இலக்குகள் அனைவரும் காமினி போன்று, தமிழர் பலரின் உயிருக்கு, உடமைகளுக்கும் உலைவைத்தவர்களே.! இதை இளைய தலைமுறைப் பிள்ளைகள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்...!!! 

வரலாற்றுடன்.... 

- ஈழத்து துரோணர்.
« PREV
NEXT »

No comments