நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமாரனின் எதிர்ப்பு காரணமாகவே முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவுக்கு அமெரிக்க வீசா மறுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இது தொடர்பான செய்தியொன்றை திவயின பத்திரிகை வெளியிட்டுள்ளது. குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமாரன் மற்றும் அமெரிக்க வெளிநாட்டலுவல்கள் தொடர்பான உதவிச் செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக் ஆகியோருக்கிடையில் சிறந்த நட்புறவு நிலவுகின்றது.
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டப் போரின் போது போர்க்குற்றங்களை இழைத்த இராணுவத்தினர் என்ற ரீதியில் 12 இராணுவ அதிகாரிகளின் பெயர்களை உருத்திரகுமாரன் அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகளிடம் கையளித்துள்ளார்.
குறித்த பட்டியலில் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவுக்கான வீசாவுக்கு அண்மையில் சரத் பொன்சேகா விண்ணப்பித்திருந்தார். எனினும் உருத்திரகுமாரனின் எதிர்ப்பு காரணமாக அவருக்கு வீசா மறுக்கப்பட்டுள்ளது என்றும் குறித்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments
Post a Comment