நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு சொந்தமான டிபென்டர் ரக வாகனத்தில் கடத்தி, கடுமையாக தாக்கி, விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் இளைஞன் இவ்வாறு கூறுகின்றார்.
நான் கடமையாற்றும் நிறுவனத்துக்குள் வந்த இனதெரியாத நபர்கள் மூவர், கொஞ்சம் வெளியே வா, நாங்கள் உன்னுடன் பேசவேண்டும், வா வெளியே போவம் என்றனர்.
நான் சொன்னேன், என்னால் வரமுடியாது.
நான் வேலைச்செய்துகொண்டிருக்கின்றேன். என்னுடைய பொஸ்ஸிடம் (முகாமையாளர்) கேட்டுவிட்டு அழைத்துச்செல்லுங்கள் என்றேன்.
இல்லை, இல்லை, பொஸ்ஸிடம் கேட்கவேண்டியதில்லை என்று கூறியவர்கள் என்னை வெளியே தள்ளிக்கொண்டு வந்தனர்.
என்னுடைய கழுத்தை ஒருவர் பிடித்துக்கொண்டார். மற்றவர், எனது ரீசேர்ட்டை பிடித்தார். அந்த ரீசேர்ட் கிழிந்துவிட்டது.
இன்னுமிருவர் முன்னாளிலிருந்து ஓடிவந்தனர். வந்தவர்களும் என்னை இருக்கிப்பிடித்து தள்ளிக்கொண்டே போயினர்.
என்ன செய்வதென்று தெரியாத நான், கதவைப்பிடித்துக்கொண்டேன்.
ம்ம் என்னால் முடியவில்லை.
என்னை, டிப்பென்டருக்கு அருகில் இழுத்துகொண்டுபோய் தள்ளிவிட்டனர்.
அங்கும் இன்னும் இரண்டு மூன்று பேர் இருந்தனர்.
இதற்கிடையில் என்னுடைய பொஸ் வந்துவிட்டார். நீங்கள்,யார்? நீங்கள் யாரென்று என்னுடைய பொஸ் கேட்டார்.
நாங்கள், பொலிஸ் என்றனர்.
எங்கே? காட் (அடையாள அட்டையை) காட்டுமாறு என்னுடைய பொஸ் கேட்டார்.
உனக்கு, காட்டவேண்டிய அவசிமில்லை என்று என்னுடைய பொஸ்ஸையும் தள்ளிவிட்டனர்.
அவரை தள்ளிவிட்டதன் பின்னரே, டிபென்டருக்குள் என்னை தள்ளிவிட்டனர்.
தள்ளியதன் பின்னர் தலைமுதல் கால் வரையிலும் கடுமையாக தாக்கினர். டிபென்டருக்குள் வைத்தே தாக்குதல் நடத்தினர்.
என்னை, எங்கே கொண்டு செல்கின்றீர்கள் என்று கேட்டேன்.
பொலிஸூக்குத்தான் கொண்டுசெல்கின்றோம் என்றனர்.
எனினும், தெமட்டகொடை சந்தியில் வைத்து, அந்த டிபென்டர் வாகனம், கொலன்னாவை பக்கமாக திரும்பியது.
அந்த, டிபென்டர், ஹிருணிகாவின் காரியாலத்தில் நிறுத்தப்பட்டது. அங்கு பெருந்திரளில் மக்கள் இருந்தனர்.
காரியாலத்தில் இருந்த மக்களுக்கு மத்தியில், கழுத்தைப்பிடித்து இழுத்துச் சென்றனர். எல்லோரும் பார்த்துகொண்டுதான் இருந்தனர்.
படுகொலை செய்யும் வகையிலிலே என்னை இழுத்துச்சென்றனர்.
ஹிருணிகாவின் காரியாலய அறைக்குள் இழுத்துச்சென்றனர். ஹிருணிகாவும் இருந்தார்.
இவன் தானா அவன் என்றார்.
கதிரையில் அமர்ந்திருந்த அவர், எழுந்து மேசையில் அமர்ந்துகொண்டார்.
ஆங்... நீ தானா,அவன்.
என்ன வேலை செய்திருக்கின்றாய்.
என்ன வேலை செய்திருக்கின்றாய் என்று கத்தினார்.
இப்படி அப்படி என்றார்.
இந்த மனிதன் எனக்கு நன்றாக உதவிசெய்திருக்கின்றார். அவர், கூறுவதை என்னால் மறுக்கமுடியாது. கூறியதை நம்பாமலும் இருக்க முடியாது.
என்னுடைய தேர்தலுக்கு நன்றாக உதவியிருக்கின்றார்.
ஆகையால், தான் உன்னை தூக்கினேன். எனக்கு, அதிகாரங்கள் இருக்கின்றன. சட்டமும் தெரியும். உன்னை எந்தநேரத்திலும் எனக்கு தூக்கமுடியும். அதுதான் தூக்கிகொண்டு வந்தேன் என்றார்.
நான் சொன்னேன், உங்களுக்கு சட்டம் தெரியுமாயின், ஏன்? என்னை, பொலிஸில் ஒப்படைக்கவில்லை என்றேன்.
பொலிஸ், எனக்கு தேவையில்லை, நான், தூக்கினேன். எனக்கு பலமிருக்கின்றது என்றார்.
அவ்வாறிருகையில், 15 நிமிடங்கள் கடந்துவிட்டன.
அதன்பின்னர் ஒரு கோல்வந்தது. என்னிடம், கோலை கொடுத்து, முறைப்பாட்டை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தினர்.
உன்னுடைய பொஸ், பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். அதனை, வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு கூறு, கூறு என்றனர்.
நான், சொன்னேன், என்னுடைய பொஸ்ஸிடம் கூறிவிட்டு என்னை அழைத்து வந்திருக்கலாம். எந்தவிதமான காரணங்களும் இன்றிதானே, என்னை கடத்திவந்தீர்கள். என்னால், வாபஸ் பெற்றுக்கொள்ளமுடியாது என்றேன்.
ஹிருனிகாவில் மெய்பாதுகாவலர்கள் ஐந்து, ஆறு பேரும் வந்து, தம்பி, முறைப்பாட்டை வாபஸ் பெற்றுக்கொள், வாபஸ் பெற்றுக்கொள் என்றனர்.
பிரச்சினை முற்றிவிட்டது. உன்னை, சிறையில் அடைப்பாளர்கள் என்றெல்லாம் கூறினர்.
நான், சொன்னேன். என்னை, ஏன் சிறையில் போடுகின்றனர். நீங்கள்தானே, என்னை கடத்திவந்தீர்கள் என்றேன்.
கடத்த முடியாது தானே, கடத்த முடியாது, ஹிருணிகாவின் டிபென்டர் என்று எல்லோருக்கும் தெரியும். எனக்கும் நன்றாக தெரியும். ஆனால், டிபென்டர் இலக்கம்தான் ஞாபகத்தில் இல்லை.
எனக்கு, பிரச்சினை இல்லை, என்னை, நிறுவனத்திலிருந்து விலக்கலாம். அவ்வளவுதான் செய்வார்கள் என்றேன்.
அப்படி விலக்கினால், உடனே இங்கே வா, நாங்கள், இந்த காரியாலயத்தில் வேலைப்போட்டுத் தருகின்றோம் என்றனர்.
ஹிருணிகாவும் சொன்றார், அவருடைய மெய்பாதுகாவலர்களும் கூறினார். ஹிருணிக்கான, நக்கலாகதான் கூறினார்.
அப்போது, நேரம் மாலை 6 மணியை கடந்துவிட்டது.
முறைப்பாட்டை, வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறுதான் எனக்கு அழுத்தம் கொடுத்தனர். இல்லையென்றால், போதைப்பொருள் குற்றத்துக்கான நான்கு வருடங்கள், உன்னை சிறையில் அடைக்கவும் முடியும் என்றனர்.
நான், எதுவுமே கூறவில்லை.
அதன்பின்னர், முச்சக்கரவண்டியில் ஏற்றி தனியாக அனுப்பிவிட்டனர்.
எனது, நிறுவனத்துக்கு வந்து பொஸ்ஸுடன் பொலிஸுக்கு அழைத்துசென்றார்.
நான், அறிந்தவகையில் அறுவர், கைதுசெய்யப்பட்டுள்ளனர். எனினும், என்னை கடத்திய சம்பவத்துடன் எட்டுபேருக்கு தொடர்பு இருக்கின்றது. அவ்விருவரும் இன்னும் கைதுசெய்யப்படவில்லை.
அவ்விருவரை மட்டுமல்ல, அந்த எட்டுப்பேரையும் என்னால், எப்போதும் அடையாளம் காட்டமுடியும் என்றார்.
No comments
Post a Comment