Latest News

December 24, 2015

வவுனியாவில் ஊடகவியலாளர் தாக்கப்பட்டார்
by admin - 0

பண்டிகைக் காலத்தினை முன்னிட்டு வவுனியாவில் பிரதான கடைக்கார வியாபாரிகள் மேலதிக கடைகளை அவரவர் கடைகளின் முன்பு அமைத்து இருந்தனர். இதனை இன்று வவுனியா நகரசபையினரும் பொலிசாரும் இணைந்து அகற்றும் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை குறித்த சம்பவத்தினை ஒளிப்பதிவு செய்துகொண்டிருந்த ஊடகவியலாளர் கடை ஒன்றின் ஊழியர் ஒருவரால் தாக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, தர்மலிங்கம் வீதியில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வர்த்தக நிலையங்களுக்கு முன்னால் மேலதிகமாக அமைக்கப்பட்டிருந்த கடைகளை இன்றைய தினம் வவுனியா நகரசபையினரும், பொலிசாரும் அகற்றிய போதே தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.



இந்தச் சம்பவத்தை செய்தியாக்குவதற்காக ஒளிப்பதிவில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஊடகவியலாளர் கதீசனை கடை ஒன்றின் ஊழியர் தாக்கியுள்ளார்.
இதுமட்டுமன்றி, அவரிடத்தில் ஊடகவியலாளருக்கான அடையாள அட்டையினை தமக்கு காட்டும்படி வற்புறுத்தி பதிலளிக்கக் கூட நேரம் கொடுக்காமல் தாக்கப்பட்டுள்ளார்.
பாதிப்புக்குள்ளாகிய ஊடகவியலாளர் வவுனியா பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்துக்கு ஊடகவியலாளர்கள் கடும் கண்டனம் தெரிவிப்பதோடு, சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் மீது வவுனியாப் பொலிசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும், கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் நடைபாதை வியாபாரிகள் மற்றும் வீதியோர வியாபாரிகள் மக்கள் போக்குவரத்துச் செய்யும் வீதிகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக தற்காலிக கடைகளை நிறுவி வந்தனர்.
இதைக் கவனத்தில் எடுத்த அன்றைய அரச அதிபர், உடனடியாக அக்கடைகளை அகற்றி மக்கள் இடையூறின்றி போக்குவரத்துச் செய்ய வழியேற்படுத்திக் கொடுத்தார்.




நன்றி tamilcnn
« PREV
NEXT »

No comments