Latest News

December 10, 2015

கடலூரில் திருச்சி ஈழத் தமிழர்களின் உதவிகள் கையளிப்பு
by admin - 0

கடந்த வாரம் தமிழகத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட கடும் தொடர்மழை காரணமாக வரலாறு காணாத வெள்ளம் தலைநகர் சென்னை மற்றும் பல மாவட்டங்களில் ஏற்பட்டிருந்தமை யாவரும் அறிந்ததே. இதனையடுத்து பல பகுதிகளில் இருந்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலர் உதவிகள் வழங்கி வருகின்றனர். 

இந்த வகையில் திருச்சியில் உள்ள இலங்கைத் தமிழர்களும் தமது பங்கிற்கு பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களுக்கு உதவும் வகையில் ‘வெள்ள நிவாரணம்’ அளித்திட நிதி மற்றும் பொருள் சேகரித்து வந்தனர். 
 
இவ்வாறு சேகரித்த பொருட்கள் இன்று நண்பகல் கடலூரின் கரையோரப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.


















« PREV
NEXT »

No comments