முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுமே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலைக்கு காரணமென நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்-
‘தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது பாரிய குற்றமென, முன்னர் விடுதலைப் புலி உறுப்பினர்களை விடுதலை செய்த அரசியல் தலைவர்கள் இப்போது தெரிவிக்கின்றனர்.
புலிகளின் தலைமைத்துவத்திடமிருந்து ஏதேனும் உத்தரவுகள் வந்தாலே, அவர்களது ஆதரவாளர்கள் ஏதேனும் செய்வார்கள். இன்று அவர்கள் இல்லாத நிலையில் அவர்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள். இதிலிருந்து அவர்களது செயற்பாடுகள் எவ்வாறு இருக்குமென உணர முடியும்.
யார் யாரை கொலை செய்யவேண்டும், தாக்க வேண்டும், கடத்த வேண்டுமென திட்மிட்டவர்கள் மஹிந்தவும் கோட்டாவுமே. அந்தவகையில் ரவிராஜை கொலைசெய்ய திட்டம் தீட்டியவர்களும் மஹிந்தவும் கோட்டாவுமே என நாம் கூறுவோம்.
இன்று கீழ் மட்டத்தில் உள்ளவர்களே ஆபத்தானவர்கள் என்றும், அவர்களே எல்லாவற்றிற்கும் பொறுப்பு என்றும் இவர்கள் கூறும் நியாயத்தை கடவுளாலும் ஏற்றுக்கொள்ள முடியாது’ என்றார்.
No comments
Post a Comment