Latest News

December 23, 2015

பாணந்­து­றையில் நிறப்­பூச்சு உற்­பத்தி நிறு­வ­னத்தில் வெடிப்பு-50 பேர் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தி
by admin - 0

news
பாணந்­துறை வடக்கு பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட கெசல்­வத்த - ஜயா மாவத்­தையில் அமைந்­துள்ள பிர­பல நிறப்­பூச்சு உற்­பத்தி
நிறு­வ­னத்தில் நேற்று இடம்­பெற்­ற வெடிப்புச் சம்­ப­வத்தைத் தொடர்ந்து ஏற்­பட்ட வாயுக் கசிவு கார­ண­மாக சுமார் 50 பேர் வரையில் சுவாச பிரச்­சினை கார­ண­மாக வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர்.

நேற்று காலை 10.30 மணி­ய­ளவில் இந்த சம்பவம் இடம்­பெற்­றுள்­ள­தா­கவும் நிறு­வ­னத்தின் 'தினர்' என்ற திர­வம் களஞ்­சி­யப்­ப­டுத்­தப்­படும் பாரிய கொள்­க­லனில் உள்ள குழா­யொன்றில் ஏற்­பட்ட வெடிப்புச் சம்­ப­வத்தைத் தொடர்ந்தே இந் நிலைமை ஏற்­பட்­ட­தா­கவும், பொலிஸார் தெரி­வித்­தனர்.

இதனால் நிறுவ­னத்­துக்கு அருகில் உள்ள சுமார் 30 குடும்­பங்கள் வரையில் அங்­கி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­ட­தா­கவும் பொலிஸார் குறிப்­பிட்­டனர்.
இது குறித்து மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

பிர­பல பெயின்ட் உற்­பத்தி நிறு­வ­ன­மான குறித்த நிறு­வ­னத்தில் நேற்றும் வழமை போன்று பணி­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. இதன் போது எரி­வாயு சிலிண்டர் ஒன்று வெடித்து, தினர் கொள்­க­ல­னுக்கு செல்லும் குழாயை சேதப்­ப­டுத்­தி­யுள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றது. இதனால் அந்த குழா­யிலும் வெடிப்பு ஏற்­பட்­டுள்­ளது. இத­னை­ய­டுத்து தினர் கொள்­க­லனில் இருந்து ஏற்­பட்ட வாயுக் கசிவு கார­ண­மாக அந் நிறு­வ­னத்தில் பணி புரியும் பல­ருக்கு மூச்சு திண­றல் ஏற்­பட்­டுள்­ளது. இந் நிலை­யி­லேயே உட­ன­டி­யாக மூச்சுத் திண­ற­லுக்கு உள்­ளா­ன­வர்கள் பாணந்­துறை வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்­லப்­பட்­டுள்­ளனர்.

சம்ப­வத்­தை­ய­டுத்து உட­ன­டி­யாக ஸ்தலத்து பொலி­ஸாரும் விஷேட நிபு­ணர்­களும் விரைந்த நிலையில் பெயின்ட் உற்­பத்தி நிறு­வ­னத்­துக்கு அருகில் உள்ள சுமார் 30 குடும்­பங்­களை பாது­காப்­பான இடங்­க­ளுக்கு அகற்­றி­னர். எவ்­வா­றா­யினும் வாயுக் கசிவு பின்னர் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு­வ­ரப்­பட்­ட­தாக பொலிஸார் தெரி­வித்­த­னர்.

இந்த சம்பவம் கார­ண­மாக நேற்று மாலை வரை சுமார் 50 பேர் வரையில் பாணந்­துறை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­ட­தாக வைத்­தி­ய­சாலை தக­வல்கள் தெரி­வித்­தன. அவர்­களில் பலர் நேற்று இர­வு­வ­ரை அங்­கேயே தங்­கி­யி­ருந்து சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர்­களின் நிலைமை பார­தூ­ர­மாக இல்லை என வைத்­தி­ய­சாலை தக­வல்கள் தெரி­வித்­தன.
வெடிப்பு மற்றும் வாயுக் கசிவு தொடர்பான காரணத்தைக் கண்டறிய பொலிஸார் விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
« PREV
NEXT »

No comments