Latest News

December 23, 2015

ஒரே பிரசவித்தில் 4 குழந்தைகள் பெற்ற தாய்!
by admin - 0

சில நாட்களுக்கு முன்னர் தாயொருவர் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பிரசவித்த சம்பவம் ஒன்று அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
கர்ப்பப்பை சிக்கல் காரணமாக 28 வாரங்களில் பிறக்க வேண்டிய குழந்தைகளை 31 வாரங்களாக தாயின் கர்ப்பப்பையில் வைத்து ஆரோக்கியமாக பராமரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் முதன்முதலாக கர்ப்பப்பை சிக்கலை குறைத்து கொள்வதற்காக வாய் மூலம் கொடுக்க வேண்டிய மருந்தை யோனி வழியாக அனுப்பி, 31 வாரங்களுக்கு தாயின் கர்ப்பபையில் குழந்தைகளை ஆரோக்கியமாக வைத்து பராமரித்தமை சாதனையாக குறிப்பிடப்பட்டுள்ளது. 
குழந்தைகளும் தாயும் நலமாக உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கப்படுகின்றன.

« PREV
NEXT »

No comments