தமிழ் கடவுளான முருகப் பெருமானை நோக்கி அனுஷ்டிக்கப்படுகின்ற விரதங்களில் மிகவும் முக்கியமான விரதம் கந்த சஷ்டி விரதமாகும். இந்த விரதம் கடந்த 12ம் திகதி ஆரம்பமாகியது.
சரவணப் பொய்கையில் ஆறு திருமுகங்களுடன் அவதரித்த முருகனை நோக்கி ஆறு தினங்களுக்கு இந்த விரதம் அனுஷ்டிக்கப்படும். இந்த கந்த சஷ்டி விரதத்தின் இறுதி நாளான இன்று முருகப் பெருமான் மூல மூர்த்தியாக வீற்றிருந்து அருள் பாலிக்கின்ற ஆலயங்களில் சூரன் போர் இடம்பெற்றது.
அந்தவகையில் வவுனியா நகரில் அமைந்துள்ள தண்டிக்குளம் அருள்மிகு கந்தசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விரதத்தின் சூரசம்ஹாரம் இன்று செவ்வாய்க்கிழமை ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.
No comments
Post a Comment