Latest News

November 17, 2015

வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட நமது உறவுகளாகிய 176 குடும்பங்களுக்கு உதவி புரிந்துள்ளது அரும்புகள் சமூக மேன்பாட்டு நிறுவனம்.!
by admin - 0

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நமது  உறவுகளாகிய 176 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கொடுத்து உதவி புரிந்துள்ளது 11/16/15 அன்று அரும்புகள் சமூக மேன்பாட்டு நிறுவனம்.


வடக்கில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக மக்கள் பெருமளவில் வீடுகளை விட்டு வெளியேறி பாடசாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர் 


திரு முருகண்டி இந்து வித்தியாலயத்திலும் முல்லைத்தீவு மாவட்டம் திருமுருகண்டி கிராமசேவகர் பிரிவில் 52 குடும்பங்களிற்க்கும் கிளிநொச்சி மாவட்டம் பொன்னகர் கிராமசேவகர் பிரிவ உள்ள 124 குடும்பங்களிற்க்கும் அத்தியாவசிய பொருட்களை வாங்கி கொடுத்து உதவி புரிந்துள்ளது அரும்புகள் சமூக மேன்பாட்டு நிறுவனம்

இக்கிராமங்களில் கூலி தொழிலை செய்கின்ற குடும்பங்கள் வாழ்வதோடு போரினால் பாதிக்கப் பட்டு தற்காலிக வீடுகளில் 100 மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றார்கள் என்பதும் குறிப்பிட தக்கது







“அன்பினால் அனைவரையும் அரவணைப்போம்”

« PREV
NEXT »

No comments