Latest News

November 13, 2015

ஈழத்துப் பெண் ஒருவர் 25வது ஆண்டு வேதனையிலும் படைத்த சாதனை…!
by அகலினியன் - 0

ஈழத்துப் பெண் ஒருவர் 25வது ஆண்டு வேதனையிலும் படைத்த சாதனை…!

1990ம் ஆண்டு அனலைதீவிலிருந்து இந்தியாவிற்கு அகதிகளாகப் புறப்பட்டவர்களில் 66 உயிர்களைக் காவுகொண்ட படகு விபத்தின் 25வது ஆண்டு நினைவையொட்டி அவர்களின் ஆத்ம சாந்திக்காக மிகத் தரமான முறையில் வெளிவந்துள்ளது ஒரு பாடல்.

குறித்த பாடல்காட்சிகளை இயக்கி வெளியிட்டுள்ளார் சிறந்த பெண்கலைஞரான சாலினி சார்லஸ் என்பவர். குறித்த பெண் கலைஞர் கலைத்துறையில் பல்வேறுபட்ட செயற்பாடுகளில் ஈடுபட்டுவருவதுடன் தரமிக்க கருத்துக்களுடன் கூடிய படைப்புக்களை வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான சிறந்த பாடல்களையும், குறும்படங்களையும் யாழில் இருந்து செயற்படும் ஏனைய கலைஞர்களும் கருத்தில் எடுத்து செயற்பட்டால் கலைத்துறை நிச்சயம் சிறந்த நிலைக்கு வரும்.

ஒரு குறும்படம் அல்லது பாடல்கள் எடுப்பது என்பது எவ்வளவு நுட்பமானதும் சிரமம் மிக்கதும் என்பதும் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

'உயிர்சூறை' பாடல் குறித்து, உலக அறிவிப்பாளர் பி எச் அப்துல் ஹமீத் அவர்களின் கருத்து

"நம் மண்ணில் நிகழ்ந்த ஆயிரமாயிரம் துயரக்கதைகள் மத்தியில், ஆழிக்குள் சங்கமமாய்ப் போன, அனலைதீவுச் சொந்தங்களின் கதையை, அழியாத கோலமாய், துயரம் தோய்ந்த வரிகளிலும், உள்ளத்தை உருக்கும் குரல் ஒலியியிலும், நெஞ்சை நெகிழவைக்கும் இசையிலும் உருவாக்கி, மிகச் சிறந்த தொழில் நுட்பத்தோடும், நிபுணத்துவத் திறமையோடும், ஒரு காலச்சுவடாய்க் காட்சி வடிவமாக்கிய அனைவருக்கும் நன்றி. இனி.. அந்தமண்ணில் வளரும் தலைமுறைக்கு நம்பிக்கை ஒளியூட்டும் படைப்புகளையும் எதிர்பார்க்கிறோம்."

என்று தெரிவித்திருக்கிறார்.

இதோ.... அந்த 'உயிர்ச்சூறை' காணொளி வடிவில்.....

« PREV
NEXT »

No comments