Latest News

November 13, 2015

மாவீரர் நினைவு தினம்- யாழில் சுவரொட்டிகள்
by admin - 0

தமிழீழ மாவீரர் தினத்தை நினைவுகூரும் வகையிலான சுவரொட்டிகள் இம்முறையும் மாவீரர் தினத்திற்கு முன்னதாகவே யாழ்ப்பாணத்தில் ஒட்டப்பட்டுள்ளமையினை காணக்கூடியதாகவுள்ளது.

தமிழீழ  மாவீரர்கள் தினம் வருடாந்தம் நவம்பர் மாதம் 27 ம் திகதி நினைவுகூரப்படுகிறது. வருடாந்தம் பலத்த அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் மாவீர்கள் நாள் யாழ்.பல்கலைக்கழகத்தில் நினைவுகூரப்படும்.

இந்நிலையில் இம்முறையும் மாவீரர் தினத்திற்கு முன்னதாகவே சுவரொட்டிகள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஒட்டப்பட்டிருப்பதை காண முடிகிறது.


« PREV
NEXT »

No comments