Latest News

November 09, 2015

சுமந்திரனை எதிர்க்க முடியாத சிறிதரன், சரவணபவன் - கடிவாளத்தை வைத்திருக்கும் சுமந்திரன்(சிங்கள அரசு) ?
by admin - 0

‘வலம்புரி பத்திரிகையும் இன்னொரு பத்திரிகையும் முதலமைச்சரின் வாலைப் பிடித்துக் கொண்டு திரிகின்றன. இதனால்தான் முதலமைச்சர் பற்றிய சரியான செய்திகளை நான் போட முடியாது இருக்குது.

அதோட சுமந்திரனை முழுமையாக பகைக்க முடியாது. தற்போது சிறிதரன் கூட தனது சொந்த இணையத்தளத்தில் சுமந்திரனை ஒருபோது கெட்டவனாகவோ காட்டவில்லை. மாறான சிறிதரனால் நடத்தப்படும் மறைமுக இணையத்தளத்தில்தான் கெட்டவனாக காட்டுகிறார் சிறிதரன்.

ஏனெனில் சிறிதரனின் குடும்பி சுமந்திரனிடம் மாட்டுப்பட்டுள்ளது. சிறிதரன் செய்த சில அலங்கோல வேலைகளை சுமந்திரன் ஆதாரங்களுடன் வைத்திருப்பதால் சிறிதரன் மௌனமாக இருக்க வேண்டியுள்ளது.

நான் எவ்வளவு கஸ்டப்பட்டு பத்திரிகை நடத்தகின்றேன் என்று யாருக்காவது புரியுமா? எனது பத்திரிகை எரிக்கப்பட்டு பல கோடி நட்டம் வந்தபோது யாராவது எனக்கு உதவி புரிந்தவர்களா? நான் என்ர சொந்தக்காலில் நிற்கின்றேன். கூட்டமைப்போ அல்லது முதலமைச்சரோ என்னிடம் கெஞ்சவேண்டுமே தவிர நான் யாருக்கும் பணியவேண்டிய அவசியம் இல்லை‘ இவ்வாறு தெரிவித்துள்ளார் சரவணபவன்.

தன்னைச் சந்தித்த அவரது நெருங்கிய நண்பரும் ஊடகவியலாளருமான ஒருவருக்கு சரவணபவன் இவ்வாறு தெரிவித்துள்ளாராம். இது தொடர்பாக அந்த ஊடகவியலாளர் தனது இன்னொரு நண்பருக்கு தெரிவித்து கவலைப்பட்டுள்ளாராம்.

இதே வேளை கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அருந்தவபாலனை விடக் குறைவாக வாக்குப் பெற்ற சரவணபவனை சுமந்திரனே வாக்கு மோசடி செய்ய வைத்து வெல்ல வைத்துள்ளதாகவும் அதனாலே சுமந்திரன் பற்றி உதயன் பத்திரிகை வாய்திறப்பதில்லை எனவும் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் சிலர் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதே வேளை யாழ்ப்பாணத்தில் அரசியல்கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் ஹர்த்தால் நடாத்துவதற்கு தமிழ்த்தேசியகூட்டமைப்பில் உள்ளவர்கள் முயன்றதாகவும் ஆனால் அதற்கு மாவை சேனாதிராஜா கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால் ஹர்த்தால் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

அத்துடன் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக சிறிதரன் அமுக்கி வாசித்துவருவதும் சந்தேகம் தருவதாக கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இனப்படுகொலை விடயம் சம்பந்தமாக சுமந்திரனுக்கு எதிராக எதிர்ப்புக்கள் வலுத்துவரும் நிலையில் தான் இனப்படுகொலை சம்பந்தமாக தெரிவித்த கருத்துக்கள் என கூறப்படுவது வதந்தி என அவர் கருத்து தெரிவித்துள்ளார். http://feeds.feedburner.com/vivasaayi/QMzm
« PREV
NEXT »

No comments