நான் இன்னும் சாகவில்லை. அப்பா இன்னும் இருக்கிறேன் என்று கூறத்தான் இங்கு வந்தேன் என்று கூறி, அமைச்சர் விஜித் விஜிதமுனி சொய்ஸாவுக்குப் பதிலடி கொடுத்திருக்கிறார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்ததையடுத்து கருத்து வெளியிட்டிருந்த முன்னாள் அமைச்சர் விஜித் விஜிதமுனி சொய்ஸா, அப்பா இறந்துவிட்டார் என்று கூறியிருந்தார்.
இவரின் கருத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பிபிலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது பொலிஸ்மா அதிபர் உத்தரவு பிறப்பிப்பதில்லை. பிரதமர் தான் உத்தரவுகளைப் பிறப்பிக்கின்றார். தீர்மானிப்பதும் அவர்தான். அமைச்சரவையில் ஒரு குழுவுள்ளது. அதற்கு மேலாக தேசிய நிறைவேற்றுச் சபை என்ற ஒன்றுள்ளது. அதில் ஜே.வி.பியும் அங்கம் வகிக்கின்றது. யானையின் கழுத்தில் மணி கிடப்பதாக ஜே.வி.பியின் முன்னாள் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க கூறியுள்ளார். மாற்றம் ஒன்று வேண்டும் என்றும்தான் மக்கள் வாக்களித்தனர். அதை நாம் ஏற்றுக்கொண்டோம்.
ஏற்றுக்கொண்டது மட்டுமன்றி, கட்சியின் தலைமைப் பதவி வேண்டும் என்று என்னிடம் வந்து கேட்டனர். அதையும் கொடுத்தேன். வீட்டுக்குச் சென்று சற்று ஆறுதலாக இருந்தேன். அதன்பின்னர் என்மீது தொடர்ச்சியாக சேறுபூசத் தொடங்கினர். நானும், அதற்குப் பதிலடிகொடுக்க ஆரம்பித்தேன்.
இவற்றை கடவுளிடம்தான் சொல்லமுடியும். அதனால் விகாரைகளுக்குச் சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டேன். இதுபோன்ற திரிபுபடுத்தப்பட்ட அரசு; பழிவாங்கும் அரசு. நான் இன்னும் சாகவில்லை என்று கூறத்தான் இங்கு வந்தேன்.
அப்பா இன்னும் இருக்கிறேன் என்று கூறியுள்ளார் மஹிந்த.
No comments
Post a Comment