தமிழீழ விடுதலைப்புலிகள்,நாடுகடத்த தமிழீழ அரசாங்கம்,தமிழர் ஒருங்கிணைப்பு குழு உட்பட்ட 8 அமைப்புக்களின் தடை நீடிப்பு அத்துடன் GTF,BTF தடைகள் நீக்கப்பட்டுள்ளது .
விசேட வர்த்தகமானி அறிவித்தல் ஶ்ரீலங்கா அரசு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
2014 ம் ஆண்டு மார்ச் மாதம் 21 ம் திகதி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச 1854/41 என்ற இலக்கத்தை கொண்ட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்புகள் என சந்தேகிக்கப்படும் 17 அமைப்புகள் தடை செய்யப்பட்டதுடன் 424 நபர்கள் இலங்கைக்கு வருவது தடை செய்யப்பட்டது.
முள்ளிவாய்க்கல் பகுதியில் விடுதலைப் புலிகளின் பதுங்குகுழி ஒன்றில் இருந்து கைப்பற்றப்பட்ட இரகசிய ஆவணம் ஒன்றின் அடிப்படையிலேயே இந்த தடைவிதிக்கப்பட்டதாக கடந்த அரசாங்கம் கூறியது.
தற்போது உயிருடன் இல்லாத நபர்களின் பெயர்களும் தடை செய்யப்பட்டவர்களின் பட்டியலில் இடம்பெற்றிருந்தது.
இந்த நிலையில், நேற்று வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில், உலக தமிழர் பேரவை உட்பட சில அமைப்புகளுக்கும் நபர்களுக்குமான தடை நீக்கப்பட்டுள்ளது.
No comments
Post a Comment